Indian 2: ரசிகர்களுடன் இந்தியன் 2 படம் பார்த்த ஆண்டவர்.. கமல் கொடுத்த சர்ப்ரைஸில் ரசிகர்கள் குஷி!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் படத்தினை இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசன், நாசர் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Indian 2 Kamal Haasan Shankar 2

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கப்பட்டு வந்த இந்தியன் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதில் இந்தியன் 2 கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருப்பதால், அந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Indian 2 Kamal Haasan Shankar 2

படத்தில் கமல் ஹாசன் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார் என படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போதே தெரிந்தது என்பதால் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் செம ட்ரீட்டாக அமையும் என ஏற்கனவே இணையத்தில் பேச்சுகள் உலா வந்த வண்ணம் இருந்தது. படத்திற்கான புரோமோசனை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டது.

Indian 2 Kamal Haasan Shankar 2

படக்குழு: படத்தில் கமல் ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி ஷங்கர், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல் கமல் ஹாசனே பல்வேறு கெட்டப்புகளில் வருவதால் படத்தில் ரசிகர்களுக்கு கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் திருப்தி கொடுக்கும் என நம்பிக்கையோடு படம் பார்க்கச் சென்று கொண்டு இருக்கின்றனர்.

இசை: இதுமட்டும் இல்லாமல் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தாத்தா கதறவிட போறாரே பாடல் பள்ளிக் குழந்தைகள் வரை ரீச் ஆனது. மேலும் படத்திற்கான புரோமோஷனின் போது படக்குழுவினர் அனிருத் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ரசிகர்களுடன்: இந்நிலையில் இன்று ரிலீசான இந்தியன் 2 படத்தினை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து கமல்ஹாசனும் ஷங்கரும் படம் பார்த்தனர். இவர்கள் மட்டும் இல்லாமல் நடிகர் நாசரும் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தார். படம் பார்ப்பதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் நாசர், " நானும் மற்ற ரசிகர்களைப் போல் இந்தியன் 2 படத்தினை பார்க்க ஆவலாக உள்ளேன். இந்த படத்திற்காக படக்குழுவினர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளனர். இன்னும் கொஞ்ச நேரத்தில் படத்தைப் பார்த்துவிடுவேன். அதனால் படம் பார்த்துவிட்டு வந்து உங்களிடம் படம் குறித்து கட்டாயம் பேசுகின்றேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X