திரையில் கெட்டவனாக இருக்க விரும்புகிறேன்.. கல்கி 2898 AD ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கமல் பேச்சு!

மும்பை: பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் லீட் ரோலில் நடிக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. இந்த திரைப்படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உலகநாயகனுக்கு கல்கி 2898 AD படத்தின் முதல் டிக்கெட் வழங்கப்பட்டது.

'கல்கி 2898 AD' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உள்ளது. தெலுங்கில் மகாநடி உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை உருவாக்கி உள்ளார். இதில், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kalki 2898 AD Kamal haasan Prabhas Amitabh Bachchan 2898 AD

கல்கி 2898 AD: தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாக இருப்பதால் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக படக்குழு பலகோடிகளை செலவிட்டு வருகிறது. ஐ.பி.எல் போட்டியின் போது 12 நொடி விளம்பரத்திற்காக 3 கோடியை செலவு செய்த தயாரிப்பு நிறுவனம், மேலும் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை கொடுக்கும் வகையில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது.

புஜ்ஜி ரோபோ: அதில், படத்தின் நடிகர் பிரபாஸும் கலந்து கொண்டு, 'கல்கி 2898 AD' முக்கிய கதாபாத்திரமான புஜ்ஜி ரோபோவை அறிமுகப்படுத்தினார். இதில் ரோபோ புஜ்ஜி தனது கட்டுமானத்தில் வேகமாக இருக்குமாறு டெவலப்பர்களை தொடர்புபடுத்தி தொந்தரவு செய்யும், புத்திசாலி கதாபாத்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது. புஜ்ஜியின் கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

கமலின் ரோல்: 'கல்கி 2898 AD' படத்தில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கேரக்டரில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள நெமாவார், நர்மதா காட் என்ற இடத்தில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவரது கதாபாத்திரம் பற்றிய எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.

'கல்கி 2898 AD' ப்ரீ ரிலீஸ் ஈவட்: இந்நிலையில் 'கல்கி 2898 AD' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், டாணா டக்குபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 'கல்கி 2898 AD' டிரைலர் திரையிடப்பட்டது.

அப்போது பேசிய அமிதாப் பச்சன், நாக் அஸ்வின் கல்கி 2898 படத்தின் கதையை என்னிடம் கூறும் போது, இதெல்லாம் சாத்தியமா என்று யோசித்தேன், மேலும் இவர் குடித்திருக்கிறாரா? என்று கூட யோசித்தேன். ஆனால், இப்போது படத்தை பார்க்கும் போது அது அற்புதமான படைப்பாக வந்துள்ளது என்றார்.

கெட்ட மனிதனாக இருக்க விரும்புகிறேன்: இதையடுத்து பேசிய கமலஹாசன், இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநரை பாராட்டினார். மேலும், நான் எப்போதும் கெட்ட மனிதனாக நடிக்கவே விரும்புவேன். ஏனென்றால் கெட்ட மனிதர்கள் எல்லா நல்ல காரியங்களையும் படத்தில் செய்வார்கள் என்றார். இந்த படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குநருக்கு நன்றி, அது ஒரு அற்புதமான அனுபவமாக மாறி உள்ளது என்றார். இதையடுத்து இந்த மாதம் 27ந் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் டிக்கெட் கமலஹாசனுக்கு வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X