Kalaignar 100 event: கலைஞரின் பண்பு ஸ்டாலினிடம் உள்ளது.. கமல் பேச்சு!
சென்னை: என் நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதலமைச்சருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். கலைஞரின் இந்த பண்பு முதலமைச்சர் ஸ்டாலினிடம் உள்ளது. மேலும், என் பள்ளி பருவத்தில் கலைஞர் போல ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்ள வேண்டு என்று ஆசைப்பட்டு என் அக்காவிடம் கேட்டேன் என்று மேடையில் பேசினார் கமல்.
சென்னையில் நடைபெற்று வரும் கலைஞர் 100 விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞருக்கு, நூற்றாண்டு விழா இன்று, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் விழாக்கோலம் கண்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது லதாவுடன் கலந்து கொண்டார். இதே போல கமல் ஹாசன்,தனுஷ், கார்த்தி, பார்த்திபன், வெற்றிமாறன்,வடிவேலு உதயநிதி, நயன்தாரா, லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், முதல் வரிசையில் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மிசா காட்சி நாடகமாக நடித்து காட்டப்பட்டது. இதில், கலைஞராக தம்பி ராமையாவும் ஸ்டாலினாக விதார்த்தும் நடித்தனர். இதைப்பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் கண் கலங்கினார்.
கமல் பேச்சு: இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருக்கும் மேடையில் நான் எப்போதும் ஓரமாக தான் இருப்பேன். அதனால் தான் நடு மேடையில் நிற்காமல் தொகுப்பாளர் பேசும் இடத்தில் இருக்கிறேன். மேலும், என் நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதலமைச்சருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். கலைஞரின் இந்த பண்பு முதலமைச்சர் ஸ்டாலினிடம் உள்ளது.
சினிமா அரசியல்: சினிமாவில் இருந்த போது அரசியலையும், அரசியலில் இருந்த போது சினிமாவையும் மறக்காமல் இருந்தவர் கலைஞர். அவர் தன்னையும் வளர்ந்தார். தமிழையும் வளர்த்தார் தமிழ் நாட்டையும் வளர்த்தார். சிவாஜி எம்ஜிஆர் ஆகிய இரு ஆளுமைகளை தனது வசனங்களால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாய் மாற்றியவர் கலைஞர். தன்னுடைய கொள்கைகளை தன்னுடைய வசனங்களில் பொருத்தக்கூடியவர் கலைஞர்.
அவர் சூட்டிய பட்டம் கலைஞானி: நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது. சிறு வயதில் என் அக்காவிடம் கருணாநிதி போன்று முடி வைத்துத் விடுங்கள் என்று சொல்லுவேன். எனக்கு அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டத்தை என்றும் மறவேன். தமிழ் சினிமாவின் மக்களுடன் உறவாடும் வாய்ப்பை என்றும் அவர் விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது எதையும் விடக்கூடாது என்பது நான் அவரிடம் இருந்து கற்று கொண்ட பாடம். அவர் கற்றுக்கொடுத்த பாடத்தை நான் எஎன்னுடைய வாழ்க்கையில் என்றும் பின்பற்றுவேன் என்றார்.


Click it and Unblock the Notifications











