காலம் கடந்து பேசும் கமலின் காதல் வாழ்க்கை.. ஸ்ரீவித்யாவை மறக்கமுடியாமல் தவிக்கும் உலகநாயகன்!
சென்னை: உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனை கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து நடிகைகளும் வளைத்து வளைத்து காதலித்துள்ளனர். தற்போது, நடிகை ஸ்ரீவித்யா, கமலை காதலித்தது குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதே போல, கமல்ஹாசன் காபி வித் டிடி' நிகழ்ச்சியில் ஸ்ரீவித்யா குறித்து கமல் பேசிய மற்றொரு வீடியோ ஒன்றும் இணையத்தில் வலம் வருகிறது.
களத்தூர் கண்ணம்மா படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய கமலஹாசன், சினிமாவில் தன்னால் நடைமுறைப்படுத்த முடியாத களமே இல்லை எனும்படியாக இத்தனை வருட காலமாக அவரது பயணம் தொடர்ந்து வருகிறது. நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை இயக்குநர், நடன இயக்குநர் என்று இவர் கால் தடம் பதியாத துறையே இல்லை என்று சொல்லலாம்

கமலுக்கு தற்போது 68 வயது ஆனாலும்,வயது என்பது ஜஸ்ட் ஏ நம்பர் என்று சொல்லும் அளவுக்கு இன்றைய இளம் நடிகர்களுகே டஃப் கொடுத்து வருகிறார். கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபாஸின் 'கல்கி 2829 ஏ.டி படத்திலும் மணிரத்னம் இயக்கும் தக் லைப் படத்திலும், ஹெச்.வினோத் இயக்கும் படத்திலும் கமிட்டாகி உள்ளார். இதில் தக் லைப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
உலகநாயகன் கமலஹாசன்: சினிமாவில் நான்கு தலைமுறைகளை கண்ட கமலஹாசன், சினிமாவில் எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறாரோ அதே அளவிற்கு கிசுகிசுவிலும் உச்சத்தில் இருந்தார். அதற்கு முக்கிய காரணம் நடிகர் கமல்ஹாசனின் நிறம், அழகு, வசீகரம், திறமை என அத்தனை அம்சங்களும் பொருந்தி இருந்ததால் இவர் பின்னால் பல நடிகைகள் சுற்றினார்கள். நடிகை ஸ்ரீதேவி கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்த அவரை காதலித்தார். ஆனால், நடிகை ரேகா பற்றியும் கமல் பற்றி கிசுகிசு எழுந்ததால், இவர்கள் காதல் கைகூடவில்லை. அந்த காலத்தில் கமலுடன் யார் சேர்ந்து நடித்தாலும் நிச்சயம் அவர் மீது காதல் வந்துவிடும் அது போலத்தான் ஸ்ரீதேவிக்கும் அவர் மீது காதல் வந்தது. ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா என பல நடிகைகளும் இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.

வாணிகணபதியுடன் திருமணம்: ஆனால், கமல் 1978ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் இரண்டாவதாக சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து நடிகை கௌதமியுடன் லின் இன் ரிலேஷன்ஷிப்பில் கமல் நீண்ட காலம் இருந்தார். கௌதமி வாழ்க்கையிலும், பிசினஸிலும் கமலுக்கு பக்க பலமாக இருந்தார்.
ஸ்ரீவித்யா கமல் காதல்: இந்நிலையில் நடிகை ஸ்ரீவித்யா, கமல் மீதான காதல் குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், நானும் அவரும் காதலிச்சது ஒட்டுமொத்த திரை துறைக்கும் எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் தெரியும். ஒரு நாள் என் அம்மா எங்களை அழைத்து. உங்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னார். இதனால் அவருக்கு மிகுந்த கோபம் வந்துடிச்சி. அதன் பின்னர் அவர் என்னிடம் பேசவே இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் அவருக்கு திருமணமாகிவிட்டதாக நான் கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன். நான் அவரை இழந்துவிட்டேன் என்று அப்படியே உறைந்து போனேன் என்றும் பேசி இருக்கிறார்

தோழி அல்ல காதலி: கமல் குறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ வைரலாகும் நிலையில், ஸ்ரீவித்யா குறித்து கமல் பேசியுள்ள பழைய வீடியோ ஒன்றும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதில், காபி வித் டிடி நிகழ்ச்சியில் அபூர்வ ராகங்கள் படத்தின் புகைப்படத்தை காட்டி கமலிடம் கேட்கும் போது, இந்த படம் எடுக்கும் போது எனக்கு பத்தொன்பது வயசு. கூட நடிச்சுட்டு இருக்கும் போது, நான் திறமையாளன் என்பதை உணர்ந்து, எனக்கு உணர்த்தியவர் ஸ்ரீவித்யா என்றார். உடனே டிடி ஒரு அன்பு தோழி என கேட்க, தோழி இல்ல காதலி அதுல எந்த சந்தேகமே கிடையாது. இந்த படத்துல வந்த பாத்திரங்கள் போலவே அதுல காதலா வந்துச்சான்னு எனக்கு தெரியாது.

ஸ்ரீவித்யாவை மறக்காத கமல்: ஆனால் மறக்க முடியாமல் இருவருக்கும் கடைசி வரையில் அது இருந்தது. அது கல்யாணத்துல தான் முடிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.எனக்கு ரொம்ப முக்கியமான ஒரு கதாநாயகி என தெரிவித்துள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்த போதும் இருவரும் சேர்ந்து வாழவில்லை நடிகை ஸ்ரீ வித்யா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின் ஜார்ஜுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின் புற்று நோய் காரணமாக சினிமாவில் இருந்து விலகிய ஸ்ரீவித்தியா சில ஆண்டுகளில் இறந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











