நல்ல நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு செல்கிறேன்..விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி!

சென்னை: தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார் அவருக்கு வயது 71. அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Ulaganayagan Kamalhaasan pays homage to vijayakanth in person

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்தில் உடலில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு ,அங்கு சில சடங்குகள் செய்யப்பட்டு பின், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுத்து அழகுபார்த்த வள்ளலின் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள், கட்சி அலுவலகத்தின் வாசலிலேயே தவம் கிடந்தனர்.

தீவுத்திடலிலிருந்து ஊர்வலம்: கட்டுக்கடங்காத கூட்டம் கோயம்பேடுக்கு படையெடுத்ததால், அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், கலைத் துறையினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக விஜயகாந்த் உடல், சென்னை தீவுத்திடலில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இறுதி ஊர்வலம் மதியம் 1 மணி அளவில் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தலைமை அலுவலகம் சென்றடையும் என்று தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு. தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணி அளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

கமல்ஹாசன் நேரில் அஞ்சலி: இந்நிலையில் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தனது துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் கமல் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். மேலும் பிரேம லதா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறிய கமல். எளிமை, நட்பு, பெருந்தன்மை, உழைப்பு, அத்தனையும் விஜயகாந்துக்கு பொருந்தும். ஆரம்பத்தில் நான் பார்க்கும் போது எப்படி பழகினாரோ நட்சத்திரமான பிறகும் அதே மாதிரி பழகினார். அவரது கோபத்துக்கு ரசிகன். அதனால்தான் மக்கள் பணிக்கே அவர் வந்தார். நல்ல நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று கமல்ஹாசன் தழுதழுத்த குரலில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X