'உளியின் ஓசை' பட இயக்குனர் இளவேனில் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!
சென்னை: எழுத்தாளரும் இயக்குனருமான இளவேனில் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73.
கருணாநிதியின் சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதையை அடிப்படையாக வைத்து 'உளியின் ஓசை' என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டது.

இதில் வினீத், கீர்த்தி சாவ்யா, சரத்பாபு, மனோரமா, கோவை சரளா, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர்.
இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தை இயக்கியவர், இளவேனில். எழுத்தாளரான இவர், ஆத்மா என்றொரு தெருப்பாடகன், புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணம் அடைந்தார்.
அவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை வடபழநியில் உள்ள ஏ.வி.எம் சுடுகாட்டில் நடக்கிறது. மறைந்த இளவேனிலுக்கு மனைவி பாக்கியலட்சுமி, மகன் சிந்து கார்க்கி, மகள் சுபா உள்ளனர். இளவேனில் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











