பட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa
சென்னை: பேட்ட படத்தில் வரும் உல்லாலா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. மரண மாஸ் லிரிக்கல் வீடியோவை அடுத்து உல்லாலா லிரிக்கல் வீடியோ வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

லிரிக்கல் வீடியோ வெளியாவதற்கு முன்பு ஸ்னீக்பீக் வெளியானது. இந்நிலையில் அறிவித்தபடி உல்லாலா லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேல நீ மனசு வச்சுப்புட்டா ரசிக்க முடியும் உன்னால நீ சிந்துற கண்ணீரும் இங்கு நிரந்தரமில்ல என்று அந்த பாடல் துவங்குகிறது.
மரண மாஸை போன்றே இந்த பாடலும் அருமையாக உள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் நன்றாக உள்ளது. பேட்ட பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











