#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta
Recommended Video

சென்னை: பேட்ட படத்தில் வரும் தலைவர் பைலா பாடலின் ஸ்னீக்பீக் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதையடுத்து உல்லாலா பாடல் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக பாடலின் ஸ்னீக் பீக் வெளியானது. ஸ்னீக் பீக்கை ட்விட்டரில் வெளியிட்டு அனிருத் கூறியிருப்பதாவது,
மரண மாஸ் பாடலுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இரண்டாவது பாடல் தலைவர் பைலா, உல்லாலா என்கிற பாட்டு. தில்லு முல்லு படத்தில் ரஜினி பொய் சொல்லிவிட்டு கால்பந்து ஸ்டேடியத்தில் ஜாலியாக இருப்பார். அதில் குறும்புத்தனம் அதிகம் இருக்கும். அதை ரொம்ப ரசித்திருக்கிறோம். அந்த மாதிரி ஒரு பைலா பாடல் அவருக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது என்று தெரிவித்துள்ளார்.
உல்லாலா டியூனை எங்கேயோ கேட்டது போன்றும் உள்ளது, கேட்காதது போன்றும் உள்ளது. ஆனால் நல்லா இருக்கு அனி.


Click it and Unblock the Notifications











