உள்ளத்தை அள்ளித்தாவும், சபாஷ் மீனாவும் ஒன்றே...ரீவைண்ட் ராஜா ஒரு குட்டி ரிப்போர்ட்
சென்னை: ரீவைண்ட் ராஜாவில் நாம் பார்க்கப்போகும் படங்கள் உள்ளத்தை அள்ளித்தா, சபாஷ் மீனா.
Recommended Video
பொதுவாக திரைப்படத்துறையில் நல்ல கதையம்சம் கொண்ட படத்திற்கு வரவேற்பு அன்றும், இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ஒரு வரி கதையைக் கொண்டு திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்து பல இயக்குனர்கள் வெற்றி கண்டுள்ளனர். மேலும் ஒரே கதையை காலக்கட்டத்திற்கேற்ப மாற்றி விறுவிறுப்பாக கொடுப்பதிலும் இயக்குனர்கள் சாதனை படைத்துள்னர்.
அந்த வரிசையில் 1958ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த சபாஷ்மீனாவும், 1996ம் ஆண்டு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தாவும் ஒரே கதையை கொண்டது.

முழு நீள காமெடிப்படம்
பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ஆர்.பந்துலு இயக்கி தயாரித்த சபாஷ்மீனா படத்தில் நடிகர் சிவாஜிகணேசன், சந்திரபாபு, எஸ்.வி.ரங்காராவ், சரோஜாதேவி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான கதையை தாதா மிராசி எழுதியிருந்தார். நீலகண்டன் வசனமும், டி.ஜி.லிங்கப்பா இசையும் இப்படத்திற்கு அமைந்திருந்தது. பணக்கார தந்தையான ரங்காராவ், தனது மகன் சிவாஜிகணேசனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்பதற்காக தனது நண்பன் சந்தானம் வீட்டிற்கு அனுப்புவார்.

விழுந்து விழுந்து சிரித்தனர்
அங்கு நடைபெறும் கலாட்டாக்களை காமெடியாக இருக்கும். சிவாஜிகணேசனின் நண்பராக அந்த காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த சந்திரபாபு நடித்திருந்தார். ஆள்மாறாட்டத்தை மையமாக வைத்து முழு நீள காமெடிப்படமாக கருப்பு, வெள்ளை கலரில் உருவான இத்திரைப்படம் அக்காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. சிவாஜி ரசிகர்கள் ஒரு பக்கம், சந்திரபாபு ரசிகர்கள் ஒரு பக்கம் என்று விழுந்து விழுந்து பல காட்சிகளில் சிரித்தனர் .

ரசிகர்களுக்கு விருந்து
இதே கதையை நடிகர்களை மட்டும் புதுப்பித்து கதையை மாற்றாமல் 1996ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தை இயக்கினார். அதாவது சிவாஜிகணேசன் கதாபத்திரத்திற்கு நடிகர் கார்த்திக்கும், சந்திரபாபு கதாபாத்திரத்திற்கு நடிகர் கவுண்டமணியும், ரங்காராவ் கதாபாத்திரத்திற்கு ஜெய்கணேஷ்ம், சந்தானம் கதாபாத்திரத்திற்கு நடிகர் மணிவண்ணனும், சரோஜினி தேவி கதாபாத்திரத்திற்கு நடிகை ரம்பாவும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 90ஸ் கிட்ஸ் காலக்கட்டத்தில் உள்ள ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

தொடையழகி ரம்பா
இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைக்க, கே.செல்வபாரதி வசனம் எழுதியிருந்தார். தொடையழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ரம்பாவுக்கு இத்திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற அழகிய லைலா என்ற பாடலில் ரம்பாவின் ஸ்கர்ட் பறப்பது இன்றளவும் ரசிக்கும்படியாக அமைந்தது. நடிகர் கார்த்திக், நடிகர் கவுண்டமணி ஆகியோருக்கும் இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. நடிகர் மணிவண்ணன் இரட்டை வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.இந்த இரண்டு படங்கள் பற்றிய சிறப்பு வீடியோ தொகுப்பு நமது ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் காணலாம் . வீடியோவை பார்க்க இந்த https://youtu.be/RNQAglZRsfs லிங்கை கிளிக் செய்யவும் .


Click it and Unblock the Notifications











