Ullozhukku Review: ஊர்வசி, பார்வதியின் மிரட்டலான நடிப்பு.. ’உள்ளொழுக்கு’ ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

திருவனந்தபுரம்: அறிமுக இயக்குநர் கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் ஊர்வசி, பார்வதி, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், பிரசாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'உள்ளொழுக்கு' எனும் மலையாள படம் இந்த வாரம் வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் படத்தில் எந்தவொரு குறையும் இல்லை என விமர்சித்துள்ள நிலையில், மலையாளத்தில் அடுத்த ஒரு மாஸ்டர் பீஸ் படம் இந்த ஆண்டு வெளியாகி விட்டதா என ரசிகர்கள் பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

Blue Sattai Maran Review Urvashi Parvathy

பிரமயுகம், பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம் வரிசையில் உள்ளொழுக்கு படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு படம் தரமானதாக உருவாகி இருப்பதாக கூறுகின்றனர்.

இயக்குநர் கிறிஸ்டோ டோமி: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான 'Curry & Cyanide: The Jolly Joseph Case' எனும் டாக்குமெண்ட்ரி படத்தை இயக்கிய கிறிஸ்டோ டோமி தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஊர்வசி மற்றும் பார்வதி இந்த படத்தில் வேறலெவலில் நடித்து ரசிகர்களை பிரம்மிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

மாமியார் மருமகள் பிரச்சனை: சாதிய பிரச்சனை காரணமாக காதலித்த நபரை திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் பெரியவர்கள் பார்க்கும் வரனை விருப்பமில்லாமல் பார்வதி திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால், மாப்பிள்ளைக்கு நோய் வந்து ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு விஷயம் நடக்கிறது. அவரது அம்மாவாக வரும் ஊர்வசி மருமகளுக்கு வில்லியாக மாறிவிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இயக்குநரின் திறமையான திரைக்கதை ரசிகர்களை ஆச்சர்யமடைய செய்து இந்த படத்தை பார்க்க வைக்கிறது.

சமூக பிரச்சனை: திருமணம் என்பது பெண்களுக்கு ஒரு சிறைவாசமாகவே ஏன் இருக்கிறது என்றும் திருமணமான கணவர் இறந்து விட்டால் கூட அந்த திருமண பந்தத்தை உதறித்தள்ளிவிட்டு வரமுடியாத சூழலில் பெண் கைதியாகி கிடப்பது ஏன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது இந்த படம். ஊர்வசி மற்றும் பார்வதி இருவரின் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த படத்தில் அவர்கள் இருவரையும் மேலும், வேலை வாங்கி இயக்குநர் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X