உமா ரியாஸ் மகனுக்கு திருமணம்..மெஹந்தி பங்ஷனில் பாய்ந்து முத்தம் கொடுத்த ஷாரிக் ஹாசன்!
சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், மெஹந்தி பங்ஷன் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படத்தில், அதிகம் பேசாமல், பார்வையால் அனைத்து நடிப்பையும் காட்டியவர் தான் கமலா காமேஷ். அந்த படத்தில் வரும் விசு கோதாவரி என்று கூப்பிட்டதும் அனைவரின் முன்னும் வந்து போவது இந்த முகம் தான். 80களின் காலகட்டத்தில் அம்மா கதாபாத்திரம் என்றாலே கமலா காமேஷ் தான்.

உமா ரியாஸ், ரியாஸ் கான்: இவரின் மகள் தான், உமா இவர் சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக மிரட்டிக்கொண்டு இருக்கும் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார். இதைத்தொடர்ந்து, டான், ஜகிரி தோஸ்து உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

காதல் திருமணம்: இந்நிலையில், ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததை அடுத்து பெற்றோர் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து இவர்களின் திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர்களின் திருமணம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி, அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
மெஹந்தி பங்ஷன்: திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், இன்று மெஹந்தி பங்ஷன் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் மஞ்சள் நிற உடையில் அட்டகாசமாக இருந்தனர். மணப்பெண்ணின் கையில் அழகாக மருதாணி போடப்பட்டு இருந்தது. இந்த விழாவில் ஷாரிக் ஹாசன் தனது வருங்கால மனைவிக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











