கோதாவரி... என்றும் நிலைத்து இருக்கும்… உமா ரியாஸ் கான் பெருமிதம்!
சென்னை : என் அம்மாவை போல ஒரு நடிகையை இனி பார்க்க முடியாது என்று, கமலா காமேஷ் பற்றி அவரது மகள் உமா ரியாஸ் கான் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரபல பழம்பெரும் நடிகையான கமலா காமேஷின் மகள் மற்றும் நடிகர் ரியாஸ் கானின் மனைவி தான் இந்த உமா ரியாஸ் கான். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு அதில் ஒருவர் தான் தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்றார்.

இவர்களது குடும்பத்தை ஒரு சினிமா குடும்பம் என்றே அழைக்கலாம். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்திலும் இவர்களது பங்கு உண்டு. ஹிந்தி திரையுலகில் முஸ்குராஹத் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் கால்பதித்தார் உமா ரியாஸ் கான்.
பின்னர் பத்து வருடங்களுக்குப் பின் கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் அருள்நிதி நடித்த மெளன குரு படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றது. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றார்.

சின்னத்திரையில் பல சீரியல்கள் நடித்தார் உமா ரியாஸ் கான் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் நடித்து வந்தார். தற்போது வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் உமா ரியாஸ் கான்.
இவரின் அம்மா கமலா காமேஷ் பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில் என் அம்மாவை போல ஒரு நடிகையை பார்க்க முடியாது என்றும் அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி கதாபாத்திரம் இன்று வரை பேசப்படுவதற்கு அவரின் எதார்த்தமான நடிப்புத்தான் காரணம் என்றார். எங்களுக்கு முன்னோடி என் அம்மா தான் என்று கூறினார். மேலும், இயக்குநர் விசு உடன் பல படங்களில் நடித்துள்ளார் என்று கூறிய உமா ரியாஸ் கான், ஒரு பிராமின் வீட்டு பெண் எப்படி பேசுவார்களோ அதை அப்படியே பேசி காட்டுவார் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











