முதலில் சிக்ஸ் பேக் வைத்தது சூர்யாதான்.. என்னது கேட்கல.. சிவகுமாரை கலாய்த்த நடிகரின் மனைவி

சென்னை: ரெட்ரோ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்னதாக சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்கிறார்களா?' என்று கேள்வி கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு பதிலடி கொடுத்த சூழலில்; பிரபல நடிகரின் மனைவி சிவகுமாரை கலாயத்து போஸ்ட் போட்டிருக்கிறார்

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. சிவா இயக்கியிருந்த அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஒன்றுமே இல்லாத படத்துக்கு ஏன் சூர்யாவும், ஞானவேல் ராஜாவும் அவ்வளவு ஹைப் ஏற்றினார்கள் என்று தெரியவில்லையே என ஓபனாகவே கமெண்ட்ஸ் செய்தார்கள். இதன் காரணமாக உடனடியாக ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்பதில் மிக தெளிவாகவும், தீர்க்கமாகவும் இருக்கிறார் சூர்யா.

ரெட்ரோவில் நடித்த சூர்யா: இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்திருக்கிறார் சூர்யா. 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். மே ஒன்றாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Uma Riyaz Khan Trolls Suriya s Father Sivakumar For Six Pack Issue

கன்ஃபார்ம் ஹிட்டுதான் என ரசிகர்கள் நம்பிக்கை: சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் இந்தக் கால தலைமுறை இயக்குநர்களில் கார்த்திக் கொஞ்சம் வித்தியாசமானவர். இதுவரை அவர் இயக்கிய படங்களில் ஜகமே தந்திரம் தவிர்த்து மற்ற அனைத்து படங்களுமே ஏதோ ஒருவகையில் கவனம் ஈர்த்தவைதான். இதன் காரணமாக சூர்யாவை வைத்து அவர் இயக்கியிருக்கும் ரெட்ரோ கன்ஃபார்ம் ஹிட் என்று சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

கேங்ஸ்டர் கதை வேறு: அதிலும் கார்த்திக் சுப்புராஜ் கேங்ஸ்டர் கதையை கையில் எடுத்தாலே அதில் சூப்பரான ட்ரீட்மென்ட் இருக்கும் என்பதை கடந்த காலங்களில் வெளியான அவரது படங்கள் நிரூபித்திருக்கின்றன. படத்தின் ட்ரெய்லர் அப்படி இப்படி இருந்தாலும் படத்தில் எந்தக் குறையும் இருக்காது; பல வருடங்கள் கழித்து சூர்யா கம்பேக் கொடுக்கப்போகும் படம் கண்டிப்பாக ரெட்ரோதான் என்று அடித்து சொல்கிறார்கள் ரசிகர்கள்.

சிவகுமார் பேச்சு: கங்குவா போல் இதுவும் ஆகிவிடக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் படத்தின் விழாவில் சூர்யா ஓவராக எதுவும் பேசவில்லை. ஆனால் அந்தக் குறையை போக்குவதற்கு அவரது தந்தை சிவகுமார் வந்தார். விழாவில் பேசிய அவர், "தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்னதாக சிக்ஸ் பேக் வைத்து நடித்தவர்கள் யா?' என்று கேள்வி எழுப்பினார். அவரது இந்தப் பேச்சு திரையுலகில் விவாத பொருளாக மாறியது.

உமா ரியாஸ்கான் பதிலடி: தனுஷ்தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்ததாக விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல நடிகரான ரியாஸ் கானின் மனைவி உமா ரியாஸ்கான், தனது கணவர் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 'My Man' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி சிவகுமாரை கலாய்த்து உருவாக்கப்பட்டிருந்த மீம் ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது பெரிய ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X