எங்களுக்கு தெரியாம தாலி, மோதிரம் வாங்கிட்டாங்க.. அதமட்டும் மாத்தி வாங்கிட்டாங்க.. உமா ரியாஸ் ஓபன்!

சென்னை: நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் காதல் திருமணம் செய்தவர்கள். இருவரும் தொடர்ந்து சினிமாவிலும் சின்னத்திரையிலும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் ஷாரிக் ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மரியா ஜெனிஃபர் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

இவரது காதல் மற்றும் திருமணம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 9 வயது மகளுடன் முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்று வாழ்ந்துவந்த மரியாவை பார்த்ததும் காதல் பிறந்தநிலையில், அவரை கன்வின்ஸ் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாக ஷாரிக் தெரிவித்திருந்தார்.

uma riyaz

ஷாரிக் & மரியா திருமணம்: நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். ரியாஸ் முஸ்லிம் மற்றும் உமா இந்துவாக இருந்த நிலையில் இவர்களின் காதல் திருமணத்தின் அடையாளமாக இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஷாரிக் ஹாசன், சினிமாவில் தன்னை நிரூபிக்க போராடி வருகிறார். முதலில் கேரக்டர் ரோல்களில் நடித்துவந்த இவர், ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவரது படங்கள் கவனத்தை பெற்றதோ இல்லையோ இவரது காதல் மற்றும் அதையொட்டிய திருமணம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. மரியா ஜெனிஃபர் என்பவரை இவர் காதல் திருமணம் செய்துள்ளார்.

வீட்டிற்கு தெரியாமல் தாலி வாங்கிய ஷாரிக்: இதிலென்ன புதுமை என்பவர்களுக்கு விடையாக, 9 வயது மகளுடன் வாழ்ந்துவந்த மரியாவை ஷாரிக் திருமணம் செய்துள்ளார். இது அவருக்கு முதல் திருமணம். தன்னுடைய திருமண தேதி முதல்கொண்டு தீர்மானம் செய்த ஷாரிக் ஹாசன், அதற்காக தாலி, மோதிரம் முதலான அனைத்தையும் வாங்கிவிட்டே தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவிடம் தன்னுடைய திருமணம் குறித்து பேசியதாக ரியாஸ் மற்றும் உமா ரியாஸ் இருவரும் தற்போது கூறியுள்ளனர். தன்னுடைய மகன் ஷாரிக் மற்றும் மருமகள் மரியாவுடன் இணைந்து இவர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்.

மாற்றி வாங்கிய தாலி: ஆனால் அவர்களாகவே தாலியை வாங்கியதால் தாலியை மாற்றி வாங்கிவிட்டதாகவும் அதை தான் திரும்பவும் ஒரு வரலட்சுமி திருநாளில் போய் மாற்றிக் கொடுத்ததாகவும் உமா ரியாஸ் தெரிவித்துள்ளார். தான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்த நிலையிலும் தனக்கான சில சம்பிரதாயங்களை அவர் தற்போதும் கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் தங்களின் குடும்பம் தற்போது பாரத விலாஸ் குடும்பமாக மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஷாரிக்கின் திருமணம் கிறிஸ்டியன் மற்றும் இந்து முறைப்படி நடந்த நிலையில், தங்களின் உறவினர்கள், கேரளாவிற்கு அழைத்துவந்து முஸ்லிம் முறைப்படி திருமணம் நடத்த கேட்டதாக ரியாஸ் கான் தெரிவித்துள்ளார்.

uma riyaz

கண்கலங்கிய குடும்பத்தினர்: ஷாரிக் மிகவும் எமோஷனலானவர் என்பதால் தன்னுடைய திருமணத்தின்போது மரியாவும் ரியாஸ்கானும் நடந்து வந்தபோது தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுகை வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப்பக்கம் பார்த்தபோது மரியாவும் கண்கலங்கியதாகவும் இந்தப் பக்கம் உமா ரியாசும் கண்கலங்கி உடைந்து அழுததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பேசிய ரியாஸ் கான், வாழ்க்கையில் எதற்காகவும் அலட்டிக் கொள்ளாத தன்னுடைய இளையமகனும் அண்ணனின் திருமணத்தின்போது எமோஷனலானதை சுட்டிக் காட்டியுள்ளார்.

எதையும் யோசிக்கவில்லை: இதனிடையே பேசிய மரியா ஜெனிஃபர், தங்களது திருமணத்தை தாங்கள் மிகவும் எளிமையாக யோசித்ததாகவும் ஆனால் இதை ரியாஸ் மற்றும் உமாவிடம் தெரிவித்தபின்பு அவர்கள் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய உமா ரியாஸ், தாங்கள் திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும என்று மட்டுமே யோசித்ததாகவும் அது கிறிஸ்டியன் முறைப்படியா அல்லது இந்து முறைப்படியா என்றெல்லாம் யோசிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X