நாளை திருமணம்.. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா?.. உமா ரியாஸ் மருமகள் செய்யும் வேலையை பாருங்க
சென்னை: தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடிகளில் ரியாஸ் கானும் - உமாவும் அடக்கம். கோலிவுட்டின் மூத்த நடிகையான கமலா காமேஷின் மகளான உமா; ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஷாரிக் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் சூழலில் ஒரு விஷயம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் திருமணத்துக்கு முன்பே இப்படியா என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
கோலிவுட்டின் மூத்த நடிகைகளில் ஒருவர் கமலா காமேஷ். இசையமைப்பாளர் காமேஷின் மனைவி கமலா ஆவார். இவர் சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு உமா என்ற மகள் இருக்கிறார். அவரும் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படியான நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பே சிவம்: உமா நடித்த படங்களிலேயே அன்பே சிவம் படம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்தப் படத்தில் கமல் ஹாசனை ஒருதலையாக காதலிப்பவராகவும்; கம்யூனிஸ தோழராகவும் தனது நடிப்பில் கலக்கியிருப்பார்.தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர்; அடுத்ததாக சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த உமா இப்போது மீண்டும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உமா - ரியாஸ் கான்: இதற்கிடையே உமா நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரியாஸ் கானும் தமிழில் ஃபேமஸான நடிகர். வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் அதில் தனது திறமையை காண்பிப்பவர். முக்கியமாக அவரது கட்டுமஸ்தான் உடலால் பலரால் அறியப்பட்டார். அதிலும் வின்னர் படத்தில் அவர் ஏற்றிருந்த கட்டதுரை கதாபாத்திரமும்; வடிவேலுவை அடிக்கும் ஒரு சீனில் தனது சிக்ஸ் பேக் உடலை காண்பித்தவாறு அவர் தோன்றியிருந்தது பெரும் வரவேற்பை பெற்றன.
ஷாரிக்கும் சினிமாவில்: ரியாஸ் கானுக்கும், உமாவுக்கும் ஷாரிக் என்ற மகன் இருக்கிறார். தொன்று தொட்டு தொடரும் பாரம்பரியம் போல் அவரும் சினிமாவில்தான் இருக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பென்சில் திரைப்படத்தில் ஷாரிக் அறிமுகமானார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த ஷாரிக் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. அதேசமயம் பிபி ஜோடிகளில் கலந்துகொண்டு டைட்டிலை தட்டி சென்றார் ஷாரிக்.
திருமணம்: இந்நிலையில் ஷாரிக்கிற்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. மரியா என்ற பெண்ணை காதலித்துவந்த ஷாரிக் அவரை வீட்டு சம்மதத்துடன் நாளை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் அவர்களது திருமணத்துக்கு முன்பாக இருவருக்கும் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஷூட் நடைபெற்றது. அதில் இரண்டு பேருமே காதலோடும், கலகலப்போடும் போஸ் கொடுத்தனர். மேலும் தனது மகனின் திருமணத்துக்கு அனைவரையும் அழைக்கும் விதமாக ரியாஸ் கான் ஒரு ரீல்ஸை வெளியிட்டார். அதில் மரியா கையில் சரக்கு பாட்டிலுடன் தனது தோழிகளுடன் இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











