twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா மிக மோசமா இருக்கு… தயவு செய்து பாதுகாப்பா இருங்க.. உமா ரியாஷ்கான் அறிவுரை !

    |

    சென்னை : உமா ரியாஷ்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவர் மருத்துவமனையில் இருந்தபடி பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார்.

    பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை.. சோகத்தில் ரசிகர்கள்! பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை.. சோகத்தில் ரசிகர்கள்!

    மாஸ்க்அணிந்து வெளியில் செல்லுங்க என்றும் அவர் கூறியுள்ளார்.

    தினசரி பாதிப்பு 4 லட்சம்

    தினசரி பாதிப்பு 4 லட்சம்

    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதால்,

    நேற்று ஒரே நாளில் 19,588

    நேற்று ஒரே நாளில் 19,588

    கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,86,344 பேராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 19,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    5829 கொரோனா தொற்று உறுதி

    5829 கொரோனா தொற்று உறுதி

    சென்னையில் 5829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 147பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 14,193 பேராக உயர்ந்துள்ளது.

    அறிவுரை

    அறிவுரை

    இந்நிலையில் நடிகை உமா ரியாஷ்கான் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இப்போ நெகட்டிவ்னு வந்திருக்கு என்ன கவனிச்சிக்கிட்ட மருத்துவர்களுக்கும் , செவிலியர்களுக்கு ரொம்ப நன்றி, அனைவரும் பாதுகாப்பா இருக்கு மாஸ்க் போட்டுக்கிட்டு வெளியில போங்கா பாதுகாப்பாக இருங்க என்று கூறினார்.

    English summary
    Uma Riyaz talked in a video shot inside the hospital
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X