»   »  ஹாலிவுட் படத்தில் 33 வயது தனுஷுக்கு ஜோடியான 46 வயது நடிகை

ஹாலிவுட் படத்தில் 33 வயது தனுஷுக்கு ஜோடியான 46 வயது நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாலிவுட் படத்தில் 33 வயதாகும் தனுஷுக்கு 46 வயது நடிகை உமா தர்மன் ஜோடியாக நடிக்க உள்ளார்.

கோலிவுட்டில் இருந்து ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட் சென்றார் தனுஷ். சிக்ஸ் பேக், 8 பேக் பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட் நடிகர்களுக்கு மத்தியில் சுள்ளானாக இருந்து நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பிறகு அபிதாப் பச்சனுடன் சேர்ந்து ஷமிதாப் இந்தி படத்தில் நடித்தார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

பாலிவுட் போன தனுஷ் தற்போது ஹாலிவுட் செல்கிறார். ஈரானை சேர்ந்த மர்ஜானி சத்ராபி இயக்கும் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் படத்தில் நடிக்கிறர் தனுஷ்.

உமா தர்மன்

உமா தர்மன்

ஹாலிவுட் படத்தில் தனுஷுக்கு 46 வயது உமா தர்மன் ஜோடியாக நடிக்கிறாராம். நடிப்புக்கு பெயர் போன உமா தர்மனுக்கு 46 வயதானாலும் பார்க்க இளமையாகத் தான் உள்ளார்.

ஜனவரி

ஜனவரி

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்குகிறது. முன்கூட்டியே துவங்க வேண்டிய படப்பிடிப்பு சில காரணங்களுக்காக தள்ளிப் போயுள்ளது.

தனுஷ்

தனுஷ்

தொடரி, கொடி படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்குகிறார். இத்தனை நாட்களாக நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியராக இருந்த அவர் பவர் பாண்டி மூலம் இயக்குனராகவும் ஆகியுள்ளார்.

English summary
Actress Uma Thurman will be seen opposite Dhanush in his Holywod debut.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X