விஜய்சேதுபதி மீது அபாண்ட பழி..பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..நீயெல்லாம் மனுஷனா விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபலம் வெளியிட்ட தகவலால் கொந்தளித்துப் போன பேன்ஸ் அவரை சகட்டுமேனிக்கு திட்டிதீர்த்து வருகின்றனர்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்து விடுவார்.

விஜய்சேதுபதி: கதாநாயகனாக கலக்கி வந்த விஜய்சேதுபதி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் அசத்தலான வில்லனாக வந்து அதிர வைத்தார். அதன்பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல், பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான விக்ரம் படத்தில் சந்தானம் என்ற வில்லன் ரோலில் பட்டையை கிளப்பி இருந்தார்.
ஜவான் படத்தில்: கோலிவுட்டில் மாஸ் காட்டிய விஜய்சேதுபதி, இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஜவான் படத்திலும் வில்லனாக பாலிவுட்டில் ஓர் கலக்கு கலக்க இருக்கிறார். ஜவான் படத்தில் சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நான் நடித்து இருப்பேன். ஏன் என்றால் நான் ஷாருக்கானின் தீவிர ரசிகன் என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மெரி கிறிஸ்துமஸ்: விஜய் சேதுபதி ஒரு காலகட்டத்தில் வருஷத்திற்கு 7ல் இருந்து 10 படங்கள் நடித்து வந்ததால், அலுப்பு தட்டியது. ஆகையால் இப்போது நல்ல கதைகள் மற்றும் பெரிய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைஃப் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதெல்லாம் ஒரு பொழப்பா: இந்நிலையில் பிரபல விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து, நடிகர் விஜய்சேதுபதி மீது அபாண்டமான பழியை சுமத்தி ட்வீட் போட்டுள்ளார். அதில் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது நடிகை கத்ரீனா கைஃபிற்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவினைப் பார்த்த நெட்டிசன்ஸ் தமிழ் சினிமாவிற்கே அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியும், ஆதாரமே இல்லாமல் ஒரு நல்ல மனிதர் மீது இப்படி அபாண்டமாக பழி போடுவது நியாயமா, இதெல்லாம் ஒரு பொழப்பா என்று நெட்டிசன்கள் கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











