Poonam Pandey: வெறும் 25 லட்சத்துக்கு செத்த மாதிரி நடித்த பூனம் பாண்டே?.. விளாசி தள்ளிய விமர்சகர்!
மும்பை: பாலிவுட் முதல் டோலிவுட் வரை சில படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த பூனம் பாண்டே அதிக பணம் ஈட்டும் நோக்கத்தால் ஆடைகளை துறந்து ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படங்களை தயாரித்து வந்த சாம் பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், திருமணம் ஆன சில நாட்களிலேயே அவர் மீது குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த படங்களுக்கும் ஆப்பு வந்து விட்டது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடத்திய ரியாலிட்டி ஷோவான லாக்கப் எனும் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பூனம் பாண்டே அடுத்து எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என நினைத்த நிலையில், கர்ப்பவாய் புற்றுநோய் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொண்டார் என பாலிவுட்டின் பயில்வான் ரங்கநாதனான உமைர் சந்து தற்போது வெளுத்து வாங்கி உள்ளார்.

பிட்டு பட நடிகை: ரசிகர்களுக்காக தனியாக சன்னி லியோனை போல ஆபாச பட ஆப் நடத்தி பணம் சம்பாதித்து வந்த பிட்டு பட நடிகை தான் பூனம் பாண்டே. தான் இறந்து விட்டதாக நாடகத்தை நடத்தி நாடு முழுவதும் தன்னை பற்றி பேச வைத்து விட்டார். ஆனால், அவர் ஏமாற்று பேர் வழி தான் என பல ரசிகர்களும் பதிவிட்டு வந்த நிலையில், அவரது உண்மையான முகத்திரை தற்போது கிழிந்து விட்டதாக விளாசி வருகின்றனர்.
விழிப்புணர்வு எல்லாம் சும்மா கதை: கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் பல பெண்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், எனக்கு அதெல்லாம் இல்லை. நான் மரணிக்கவும் இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த அப்படி நாடகம் போட்டேன். எல்லாரும் பெரிய மனது பண்ணி என்னை மன்னித்து விடுங்கள் என இன்று பூனம் பாண்டே வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார்.
கடுப்பான உறவினர்கள்: பாலிவுட் நடிகர்கள் மற்றும் பூனம் பாண்டே உறவினர்கள் பலரும் அவர் உண்மையாக இறந்து விட்டார் என நினைத்து குடும்பத்தினரை தொடர்பு கொண்ட நிலையிலும், பூனம் பாண்டே அறிவிறுத்தலின் பேரில் அவர்கள் வாயே திறக்காமல் நேற்று இருந்து விட்டனர். இந்நிலையில், உறவினர்களே பூனம் பாண்டே மற்றும் அவர் குடும்பத்தினர் மீது கடுப்பில் இருப்பதாக கூறுகின்றனர்.

25 லட்சத்துக்காகத்தான் இப்படி: இந்நிலையில், பாலிவுட்டில் நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றியும் சென்சாரில் படம் பார்த்து விட்டேன். இதுதான் ரிசல்ட் என முன்கூட்டியே முதல் விமர்சனம் போட்டு வாங்கிக் கட்டி வரும் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவே பூனம் பாண்டே இறக்கவில்லை என நான் சொல்லியிருந்தேன். ஆனால், யாரும் நம்பவில்லை. இப்போ அவர் வீடியோ போட்டுள்ளார். இது விழிப்புணர்வுக்காக எல்லாம் இல்லை. இதன் மூலம் 25 லட்சம் ரூபாய் அவர் சம்பாதித்து இருக்கிறார். அதற்கான டிராமா தான் இது என்றும் பூனம் பாண்டே ரொம்பவே மோசமானவர் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இதற்கான பின்விளைவுகளை பூனம் பாண்டே சீக்கிரமே அனுபவிப்பார் என்றும் கூறியுள்ளார். பூனம் பாண்டே ரசிகர்கள், அவரது ட்வீட்டுக்கு கீழ் எப்படி இருந்தாலும் அவர் மூலமாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்ல விஷயம் தான் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











