எங்கள் வாழ்க்கையின் அழகான மாலை.. ரிஷப்ஷன் புகைப்படங்களை பதிவிட்ட ஐஸ்வர்யா -உமாபதி ஜோடி!
சென்னை: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இருவருக்கும் கடந்த 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுன் கட்டிய பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது, இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துனர்.
இதைப்போல கடந்த 15ம் தேதி இவர்களின் ரிசப்ஷனும் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருந்தது. இதன் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியையொட்டி இவர்கள் இருவரும் தங்களுடைய சந்தோஷமான தருணங்களை பகிர்ந்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

உமாபதி -ஐஸ்வர்யா திருமணம்: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோர் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இணைந்து மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி சென்னையில் இவர்களின் ரிசப்ஷன் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதிலும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இணைந்து மணமக்களை வாழ்த்தினர்.
பிரபலங்கள் வாழ்த்து: ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த ரிசப்ஷனின் அடுத்தடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரிசப்ஷனை ஒட்டி ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி ராமையா இருவரும் தனியாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் உமாபதி ராமையா இருவரும் இந்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரிஷப்சன் புகைப்படங்கள்: சிறப்பான லைட்டிங்குடன் இந்த புகைப்படங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. தங்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான மற்றும் அழகான மாலை என்று இவர்கள் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஜோடி மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்களில் மாஸான பல போஸ்களை இருவரும் கொடுத்துள்ளனர். இந்த ஜோடி Made for each otherஆக காணப்படுவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உற்சாகத்தில் அர்ஜுன்: இந்த திருமணத்தால் நடிகர் அர்ஜுன் மிகப்பெரிய அளவில் உற்சாகமடைந்துள்ளதாக காணப்பட்டது. தன்னுடைய மகள் தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளதாக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகழ்ச்சி தெரிவித்திருந்தார். தனது மகளின் காதல் குறித்து தெரிந்தவுடன் அவர் உடனடியாக ஓகே சொல்லி, மகளின் விருப்பத்தை, கனவை மிகவும் பிரம்மாண்டமாக பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











