அர்ஜுன் மருமகன் படத்துக்கு ஆளே வரல.. கல்யாண ஜோர்ல உமாபதி படத்தையே கண்டுக்கல.. புலம்பும் தயாரிப்பாளர்

சென்னை: மாணிக் வித்யா இயக்கத்தில் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகியுள்ள பித்தல மாத்தி திரைப்படம் இந்த வாரம் மகாராஜா படத்துடன் வெளியானது. சிறிய பட்ஜெட்டில் இந்த படத்தை சரவணன் என்பவர் தயாரித்துள்ளார். அர்ஜுன் மகளை திருமணம் செய்து கொள்ளும் பிசியில் பித்தல மாத்தி படத்தை புரோமொட் செய்ய அந்தப் படத்தின் ஹீரோ உமாபதி வரவே இல்லை என படத்தின் தயாரிப்பாளர் புலம்பியுள்ளார்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை கடந்த ஜூன் 10-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஜூன் 14-ஆம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

Umapathy Ramaiah Arjun Aishwarya Arjun Thambi Ramaiah

சினிமாவில் பல ஆண்டுகளாக பல படங்களில் நடித்து வந்தாலும் உமாபதி ராமையாவுக்கு எந்த ஒரு படமும் பெரிதாக ஓடவில்லை. ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற உமாபதி ராமையா நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை காதலிக்கத் தொடங்கிய நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

பித்தல மாத்தி: மாணிக் வித்யா இயக்கத்தில் உமாபதி ராமையா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, பாலசரவணன், ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன், சம்ஸ்கிருதி செனாய், காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பித்தளை மாத்தி திரைப்படத்தை சரவணன் என்பவர் தயாரித்துள்ளார். இந்த வாரம் விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா படத்துடன் இந்த படம் வெளியானது. ஆனால், பலருக்கும் இந்த படம் வெளியானது தெரியாததுதான் பெரிய வருத்தம் என தயாரிப்பாளர் புலம்பியுள்ளார்.

Umapathy Ramaiah Arjun Aishwarya Arjun Thambi Ramaiah

ஷோ கேன்சல்: இந்த ஆண்டு பல சிறிய பட்ஜெட் படங்களுக்கு இந்த நிலைமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே 22 பேர் வந்தும் படத்தின் காட்சியை தியேட்டர்கள் ரத்து செய்து விட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். படம் போடும் சமயத்தில் தியேட்டருக்கு வெறும் 12 பேர் மட்டுமே வந்ததாகவும், மீதமுள்ள 10 பேர் தாமதமாக வந்த நிலையில் படத்தை தியேட்டர்கள் திரையிட வில்லை எனக் கூறியுள்ளார் சரவணன்.

கண்டுக்காத உமாபதி: அர்ஜுன் மகளை இந்த வாரம் உமாபதி ராமையா திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண பிசியில் படத்துக்கான புரமோஷன் எதையும் அவர் செய்யவில்லை. எல்லா நடிகர்களும் இந்த படத்தை அப்படியே கை கழுவி விட்டனர். காசு போட்ட தயாரிப்பாளராக நான் மட்டுமே தியேட்டர் தியேட்டராக சென்று படத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அட்லீஸ்ட் ஹீரோ உமாபதி ஒரு வீடியோ ஆவது போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு வர வைத்திருக்கலாம் எனக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

சாதாரண ஹீரோ: நான் என்ன சூப்பர் ஸ்டாரை வைத்தா படத்தை தயாரித்தேன். ஒரு சாதாரண ஹீரோவை வைத்து தான் படத்தை தயாரித்தேன். இந்த படம் எல்லாம் முதல் நாளிலே ஓடும் என்று சொல்ல முடியாது. 55 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தான் மக்கள் கூட்டம் படத்திற்கு வருவார்கள். ஆனால் அதற்கு முன்னதாக தியேட்டர்களில் இருந்து படத்தை நீக்கிவிட்டால் என்ன செய்வது என தயாரிப்பாளர் புலம்பியுள்ளார்.

ஈகோ பிரச்சனை: யாருக்கும் சம்பள பாக்கி வைக்கவில்லை என்றும் ஆனால், படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே படத்தை கண்டுக்காமல் விட்டு விட்டனர். படத்தை பார்க்க அவர்கள் கூட வரவில்லை. எங்கேயும் ஒரு பேனர் கூட வைக்கவில்லை. படம் தியேட்டரில் ஓடுகிறது என்றே தெரியாது. எந்த ஈகோவாக இருந்தாலும் தூக்கிப் போட்டு விட்டு படத்திற்காக நடிகர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சரவணன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X