ஐஸ்வர்யாவை 2 வருஷமெல்லாம் லவ் பண்ணல.. மருமகன் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அர்ஜுன்!

சென்னை: ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை சமீபத்தில் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யா திருமணம் செய்துக் கொண்டார். ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் திருமண விழாவில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உமாபதி சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு பெரிதாக எந்தவொரு படமும் ஓடவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட உமாபதி அர்ஜுன் மகளை காதலிக்க ஆரம்பித்தார்.

umapathy ramaiah aishwarya arjun rajakili

அதன் பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், தம்பி ராமைய்யா மற்றும் சமுத்திரகனி நடித்துள்ள ராஜாகிளி படத்தை உமாபதி இயக்கியுள்ளார். அந்த படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், தனது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்தும் உமாபதி விளக்கி உள்ளார்.

மாமனாரை போல டைரக்டரான மருமகன்: உமாபதி ராமைய்யா ஹீரோவாக பெரிதாக சாதிக்க முடியாத நிலையில், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தம்பி ராமைய்யாவின் உதவியோடு ராஜாகிளி படத்தை இயக்கி உள்ளதாக நேற்று நடைபெற்ற பிரஸ் மீட்டில் உமாபதி ராமைய்யா தான் இயக்குநராக மாறியதே ஒரு விபத்து தான் என்றும் அப்பாவின் உதவியுடன் தான் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன் என்றும் கூறினார். மாமனார் அர்ஜுன் படங்களை இயக்கி வரும் நிலையில், மருமகனும் இயக்குநர் ஆகிவிட்டாரே என பலரும் பாராட்டி வருகின்றனர்.

கனி அண்ணாவுக்கு நன்றி: ராஜாகிளி படத்தில் மெயின் ஹீரோவே சமுத்திரகனி தான். சமுத்திரகனி சாரை எங்கப்பா தம்பின்னு கூப்பிடுவார். நான் அண்ணான்னு கூப்பிடுவேன். அவர் ரொம்பவே பிசியாக தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததே என்னை ஆசிர்வதிக்கத்தான். ரொம்பவே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹெல்ப் பண்ணியிருக்கிறார். ஒரு சில காட்சிகள் இன்னும் ஒருமுறை எடுக்கலாம் என நான் தயங்கினாலும், அத்தனை நடிகர்களையும் உடனடியாக எல்லாரும் இங்க வாங்கன்னு கூப்பிட்டு நடிக்க வைத்து விடுவார் லவ்யூ கனி அண்ணா என சமுத்திரகனிக்கு நன்றி தெரிவித்தார்.

2 வருஷம் லவ் பண்ணல: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2 ஆண்டுகளாக நான் காதலித்து வந்தேன் என்றும் அதன் பின்னர் தான் திருமணம் நடைபெற்றதாக எல்லாம் வதந்திகள் கிளம்பின. ஆனால், சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தான் சாரின் மகள் அறிமுகம் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காதல் அரும்பியது என்று உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

சிரித்து விட்ட அர்ஜுன்: மருமகன் இயக்குநர் ஆன நிலையில், அவர் தனது காதல் குறித்தெல்லாம் படத்தின் விழா மேடையில் வெளிப்படையாக பேசுவதை பார்த்து மாமனார் அர்ஜுன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து சீதா பயணம் எனும் படத்தையும் அர்ஜுன் இயக்கி வருகிறார். உமாபதியும் இயக்குநர் ஆன நிலையில், அவரும் தனது மனைவி ஐஸ்வர்யாவை வைத்து படம் இயக்குவாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

ராஜாகிளி டிரெய்லர் ரிலீஸ்: தம்பி ராமைய்யா கதையின் நாயகனாக நடித்துள்ள ராஜாகிளி படத்தின் டிரெய்லரையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்த படம் வரும் டிசம்பர் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் தம்பி ராமைய்யா சில்மிஷம் பிடித்த தொழிலதிபராக இருந்து எப்படி பிச்சைக்காரராக மாறுகிறார் என்பது தான் கதை என்பது டிரெய்லரிலேயே தெளிவாக தெரியும்படி காட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X