உன்போதைக்கு நான் ஊறுகாவா?

வாய்க்கு வந்ததெல்லாம் தலைப்பு என்றாகிவிட்டது.
இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன, எங்க எம்எல்ஏ வரட்டும், எங்க போனாலும் உதைப்பேன் என்றெல்லாம் ராஜசேகர் டைட்டில் வைத்தார் சில பத்தாண்டுகளுக்கு முன்பு.
அப்புறம் இடியட், ராஸ்கல், கேனை என்றெல்லாம்கூட தலைப்பு பதிவாகியுள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டில். பின்னர் ஏதோ 'பெரிய மனது' பண்ணி அந்த தலைப்பை பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
சமீபத்தில் வா - குவாட்டர் கட்டிங் என்ற உன்னதமான தலைப்புடன், அதுவும் கருணாநிதி குடும்பத்திலிருந்தே ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம்,
அந்த வரிசையில் இப்போது ஒருபடத்துக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு, "உன் போதைக்கு நான் ஊறுகாவா?"
சிந்தாமணி காசிநாதன் என்பவர் இயக்க முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்!
டைட்டில் எப்படி... வெளங்கீரும்ல!
Comments


Click it and Unblock the Notifications