பவனின் 3வது கல்யாணம்: தொடரும் சந்தேகம்... விலகாத மர்மம்

ஹைதராபாத்: தெலுங்குப் பட நடிகரான பவன் கல்யாண் ஆஸ்திரேலிய நடிகை ஒருவரை 3வது திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான பவன் கல்யாண், சண்டைப் பயிற்சியாளராக ஆக விரும்பி அண்ணனின் கட்டாயத்தால் நடிகரானார். இவரது முதல்படம் 1996-ல் 'அக்கட அம்மாயீ, இக்கட அப்பாயீ' (அங்கே பொண்ணு, இங்கே பையன்) என்பதாகும்.

ஏற்கனவே இரண்டு காதல் திருமணங்களை செய்து கொண்ட பவன் சிலப்பல காரணங்களுக்காக விவாகரத்து செய்து கொண்டவர். இந்நிலையில், பவன் தற்போது ஆஸ்திரேலிய நடிகை ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது குறித்து பவன் த்ரப்பு தொடர்ந்து மவுனம் காத்து வரும் நிலையில் இத்திருமணம் குறித்து சில சந்தேகங்களும், குழப்பங்களும் உண்டாகியுள்ளன. அவையாவன....

எனது கணவர்...

எனது கணவர்...

கடந்த ஆகஸ்ட் மாதம் நண்பர் ஒருவரது சமுக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியானது. அதில், பவனுன், அவருடன் அவருடைய மூன்றாவது மனைவி என தற்போது சொல்லப் படுகிற அன்னாவும் உள்ளனர். அப்புகைப்படத்தின் கீழே அன்னா கூறுயது போல் சில வரிகள், அதாவது ‘மீசை இல்லாமல் என் கணவர்...' என வெளியிடப் பட்டிருந்தது.

மாயமான புகைப்படம்...

மாயமான புகைப்படம்...

ஆனால், புகைப்பட்ம் வெளியான சில மணி நேரங்களிலேயே தகவல் எதுமின்ரி உடனடியாக புகைப்படம் மறைந்து போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பதிவாளர் தகவல்...

பதிவாளர் தகவல்...

ஹைதராபாத், எர்ரகட்டா இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக பதிவாளர் பாசித் சித்திகீ உறுதிப்படுத்தியுள்ளார்.

சாட்சிக் கையெழுத்து....

சாட்சிக் கையெழுத்து....

கலை இயக்குநர் பி.ஆனந்தம் மற்றும் முகம்மத் அப்துல் ஆரிப், என்.சீனிவாசன் ஆகியோர் இத்திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்திட்டுள்ளதாகவும், பதிவு எண் 50, திருமணம் எண் 43ன் கீழ் இது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அன்னா லெழ்நோவா வெளிநாட்டவர் என்பதால் திருமணச் சட்டம், பிரிவு 13-ன் படி சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஏன் இப்போது...

ஏன் இப்போது...

பாசித் அளித்துள்ள தகவலின் படி, கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணத்திற்கு விண்ணப்பித்ததாகவும், அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 30ந்தேதி திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடந்த திருமணம் குறித்து இப்போது தகவல் வெளியானது எப்படி..?

அரசியல் வாழ்வு...

அரசியல் வாழ்வு...

நடிகர் சிரஞ்சீவியின் அரசியல் வாழ்க்கையை குழைப்பதற்காகவே சிலர் இப்பிரச்சினையை தற்போது பெரிது படுத்தியிருப்பதாகச் சொல்லப் படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பவன், தனது அண்ணன் சிரஞ்சீவியின் பேச்சை கேட்காமல் 'தெலுங்கு தேசம்' கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தை உள்ளது....

குழந்தை உள்ளது....

ஆனால், இந்த பதிவுத் திருமணம் நடப்பதற்கு முன்னதாகவே இருவரும் குடும்பம் நடத்தியதாகவும், அதில் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இதை அவர்கள் பதிவுத் திருமணத்துக்கான வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அப்போது சில காலங்களாக அவர்கள் ரகசிய வாழ்க்கை வாழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

குழப்பம்....

குழப்பம்....

இந்நிலையில் யார் இந்த அன்னா லெழ்நோவா என்பதுதான் தெலுங்குப் படவுலகின் மில்லியன் டாலர் கேள்வி. 'தீன்மார்' படத்தில் பவன் கல்யாணுடன் நடித்த டானா மார்க்ஸ் என்ற நடிகைதான் அன்னா லெழ்நோவா என்று ஒருதரப்பினர் கூறிக்கொண்டிருக்க, அந்த நடிகைக்கும், திருமணப் பதிவு பத்திரத்திலுள்ள புகைப்படத்துக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லையே என்று மற்றொரு தரப்பினர் மறுக்கின்றனர்.

எந்த நாடு...

எந்த நாடு...

மேலும், அன்னா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என திருமணச் சான்றிதழில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

தொடரும் மவுனம்...

தொடரும் மவுனம்...

ஆனால், பவன் கல்யாண் தரப்போ இத்திருமணம் குறித்து ஆம் என்றும் சொல்லாமல், இல்லையென்றும் மறுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருவது சந்தேகக்களை அதிகப் படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X