ஐ ரிலீஸில் இன்னும் தாமதம் ஏன்?
பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள ஷங்கரின் ஐ படம் வெளியாவதில் பல்வேறு காரணங்களால் இன்னும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ள படம் ‘ஐ'.
பிரமாண்ட தயாரிப்பு, அதைவிட பிரமாண்ட பப்ளிசிட்டு காரணமாக இந்தியாவையே சற்று திரும்பி பார்க்க வைத்த படம் ஐ.
ஆனால் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை என்பதை காட்டிலும் சரியான நேரம் அமையவில்லை என்பதுதான் உண்மை.

ட்ரைலர் எங்கே?
இறுதிக் கட்டப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இன்னும் படத்தின் டிரெய்லரே வெளியாகவில்லை. படத்தின் டிரெய்லர் இந்த மாத கடைசியில் வெளியானாலும் படத்தை டிசம்பரில் வெளியிட்டாக வேண்டும். இல்லையேல் படம் ஜனவரி கடைசிக்குப் போகும்.

கிறிஸ்துமஸ்?
டிசம்பரில் வெளியிடுவதிலும் சற்று சிக்கல் உள்ளது. அனைத்து ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘லிங்கா.' இந்த படமும் ரஜினி பிறந்த நாளான 12ல் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில் டிசம்பர் 25க்கு படம் செல்லலாம் என்கிறார்கள்.

பொங்கலுக்கு போட்டி அதிகம்
பொங்கலுக்கு வெளியிடலாம் என்றால் தமிழில் ‘என்னை அறிந்தால்' , ‘ஆம்பள' , 'உத்தம வில்லன்' ஆகியவை பரிசீலனையில் இருக்க தெலுங்கிலும் பவன் கல்யானின் 'கோபாலா கோபாலா', மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 'ஷம்ஷெர்' படமும் வெளியாவதால் அங்கும் இரு மொழியிலும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்.

டிசம்பரைத் தவறவிட்டால்...
இதனால் ‘ஐ' படம் எப்போது ரிலீஸ் என்ற கேள்விக்கு பதில் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
கண்டிப்பாக டிசம்பரில் வெளியிட்டால் மட்டுமே உண்டு இல்லையேல் ஜனவரி கடைசியிலோ அல்லது பிப்ரவரி மாதத்தில்தான் வெளியிட வேண்டும்.


Click it and Unblock the Notifications











