அடேங்கப்பா! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே.. பிரபல பாலிவுட் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ரஜினிகாந்த்!

மும்பை: லைகா தயாரிப்பில் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், திடீரென தற்போது பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது அந்த பாலிவுட் தயாரிப்பாளரே வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா, சூர்யா, தனுஷ், நயன்தாரா என பலரும் இந்தி படங்களில் நடித்து வருகின்றனர். அந்த காலத்திலேயே அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுடன் இந்தியில் நடித்து மாஸ் காட்டிய ரஜினிகாந்த் தமிழ்நாட்டிலேயே நம்முடைய சாம்ராஜ்யத்தை உருவாக்கி விடலாம் என இங்கேயே செட்டில் ஆகி விட்டார்.

Unexpeced! Rajinikanth joined hands with popular Bollywood Producer Sajid Nadiadwala

ஜெயிலர் பிளாக்பஸ்டர்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் வேட்டையை நடத்தி மிகபெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை கடந்த ஆண்டு நடத்தியது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

வேட்டையன் வேட்டையாடும்: லால் சலாம் ஓடவில்லை என்றாலும் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் மிகப்பெரியளவில் உருவாகி வருகிறது. முதல் நாளே வேட்டையன் திரைப்படம் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து 150 கோடி வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 171: அந்த படத்தை முடித்து விட்டு விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் தயாரிப்பாளருடன் இணைந்த ரஜினிகாந்த்: இந்நிலையில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நடியாவாலா (Sajid Nadiadwala) உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பை நடத்தி உள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்ட சஜித் நடியாவாலா சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பணியாற்றப் போகிறேன், ரொம்பவே சந்தோஷமாக இருக்கு என பதிவிட்டுள்ளார்.

Unexpeced! Rajinikanth joined hands with popular Bollywood Producer Sajid Nadiadwala

குடும்பத்துடன் சந்திப்பு: ரஜினிகாந்த் மட்டுமின்றி ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் சஜித் நடியவாலா மற்றும் அவரது மகளை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. விரைவில் என்ன படம் யார் இயக்குநர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

யாரு இந்த சஜித் நடியவாலா: பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ஹவுஸ்ஃபுல் சீரிஸ் படங்கள் இதுவரை 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. அந்த அனைத்துப் படங்களையும் இவர் தான் தயாரித்துள்ளார். மேலும், பாகி, பாகி 2 மற்றும் 3, சூப்பர் 30, பச்சன் பாண்டெ, 83, சத்யபிரேம் கதா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்திருக்கும் நிறுவனத்துக்கு சொந்தக்காரர் தான் இவர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறாரா? என்றும் பான் இந்தியா படமாக இது உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X