கமல் படத்திலிருந்து வெளியேறிய நடிகர்...கடைசி நிமிடத்தில் நடந்த மெகா மாற்றம்
சென்னை : 'மாஸ்டர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்க உள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சி, 'இந்தியன் 2', 'பாபநாசம் 2' உள்ளிட்ட படங்களின் வேலைகள் குறித்தும் கமலிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சினிமாவை விட்டு விலக தயார் என்ற கமல் கூறி உள்ளதால் சிலர் அடுத்த படங்கள் பற்றி கமலிடம் பேசவும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் விக்ரம் சூட்டிங்
கமல் தேர்தலில் போட்டியிடுவதால், அவர் தேர்தல் வேலைகளை முடித்த ஓரிரு நாட்களுக்கு பிறகு 'விக்ரம்' படத்தின் வேலைகளில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக, சூட்டிங் துவங்க போகும் சமயத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லாரன்ஸ் திடீர் விலகல்
முதலில் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது பல்வேறு காரணங்களால் இந்த படத்தில் இருந்து லாரன்ஸ் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை
இதனால் இந்த படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி அல்லது விஷாலிடம் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளார். விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்த கேரக்டர் மிகுந்த வரவேற்பை பெற்றது.

விரைவில் அடுத்தடுத்த அப்டேட்
'மாஸ்டர்' படம் மெகா ஹிட் ஆனதால், கமல் படத்திலும் விஜய் சேதுபதியையே வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் நினைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதால் அதற்கு முன் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











