எதிர்பார்க்காத ஒரு என்ட்ரி.. பிக் பாஸ் வீட்டுக்கு வரப் போகும் தல அஜித் பட நாயகி? ரசிகர்கள் குஷி!

சென்னை: உலக நாயகன் தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் பங்கேற்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி உள்ளதாக சூப்பரான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

பிரபல பின்னணி பாடகியான வசுந்தரா தாஸ் தான் இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ளப் போகிறாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை வெளியான எந்தவொரு கணிப்பு போட்டியாளர் பட்டியலிலும் இவங்க பெயர் அடிபடாத நிலையில், நிச்சயம் இது ரசிகர்களுக்கு செம ஷாக்கிங் ஆக இருக்கும்.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக வரும் நபர்களுக்கு நிச்சயம் கொரோனா சோதனை எடுக்கப்பட்டு, 14 நாட்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக குவாரண்டைன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சோதனையில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அந்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

எதிர்பார்க்கவே இல்லையே

எதிர்பார்க்கவே இல்லையே

கிரண் வருகிறார், பூனம் பஜ்வா வருகிறார், ஷில்பா மஞ்சுநாத் வருகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வசுந்தரா தாஸ் வரப் போவதாக தற்போது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பெங்களூருவை சேர்ந்த வசுந்தராவிற்கு இப்போ 42 வயதாகிறது.

உலக நாயகன் ஹீரோயின்

உலக நாயகன் ஹீரோயின்

உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அவருடன் ஹேராம் படத்தில் அறிமுகமான வசுந்தரா தாஸ் போட்டியாளராக பங்கேற்றால் இந்த சீசன் பிக் பாஸ் வேற லெவலில் களைகட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஏகப்பட்ட பேட்டிகளில் ஹேராம் பற்றி கமல் பேசி வரும் நிலையில், வசுந்தராவும் ஹேராம் நினைவுகளை பகிர்வாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

தல அஜித்துடன்

தல அஜித்துடன்

தமிழில் நடிகை வசுந்தரா தாஸ் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஹேராம் படத்தில் அறிமுகமான அவர், தல அஜித்துடன் இணைந்து நடித்த சிட்டிசன் படத்தை ரசிகர்கள் யாரும் மறக்கவே மாட்டார்கள். அதே போல பூக்காரி வசுந்தராவையும் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 10க்கும் மேற்பட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மச்சக்காரிக்கு அப்புறம்

மச்சக்காரிக்கு அப்புறம்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதல்வன் படத்தின் ஓப்பனிங் சாங்கான ஷகலக்கா பேபி பாடல் பாடி பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். ரிதம், சிட்டிசன், பாய்ஸ் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடிய அவர், கடைசியாக 2007ல் வெளியான சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மச்சக்காரி பாடலை பாடி இருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் வசுந்தரா தாஸ்.

போட்டியாளர் பட்டியல்

போட்டியாளர் பட்டியல்

நேற்று, விஜய் டிவி போட்டியாளர்களை சும்மா கெஸ் பண்ணுங்க என்ற ஒரு போட்டியை நடத்தி இருந்தது. அதில், ஏகப்பட்ட பேர் தங்களின் அனுமானங்களையும், விஷயம் தெரிந்த சிலர், வரப் போகும் உறுதியான பெயர்களையும் கமெண்ட் செய்தனர். இன்னும் நிகழ்ச்சி துவங்க 20 நாட்களே உள்ள நிலையில், சீக்கிரமே அதிகாரப்பூர்வ போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X