சித்ராவின் மரணத்திற்குப் பிறகும் மங்காத புகழ் - ஹிட் அடித்த கால்ஸ் பட டிரைலர்

மறைந்த நடிகை வி.ஜே சித்ரா நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நாட்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

By Jeyalakshmi C

சென்னை: மறைந்த நடிகை வி.ஜே சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நாட்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. சித்ரா மறைந்தாலும் அவரது புகழ் மறையாமல் இருக்கிறது.

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. மக்கள் தொலைக்காட்சியில் விஜேவாக பணியை தொடங்கி பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இறுதியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் பிரபலமானார்.

Unfading Fame After VJ Chitras Death - Hit Calls Movie Trailer

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேமந்த், டிசம்பர் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சித்ராவின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் முந்தையநாள் தன்னுடன் சீரியலில் நடித்து வரும் நடிகருடன் நடனமாடியது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் இதுகுறித்து கேட்டு சண்டை போட்ட கணவர் ஹேமந்த், செத்துப் போ எனக் கூறியதால் சித்ரா தற்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் சந்தேகப்பட்டு சித்ராவை அடித்து துன்புறுத்தி வந்த ஹேமந்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அவரது நண்பர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சித்ரா தற்கொலை வழக்கில் சிறையில் உள்ள அவரது கணவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிவி நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலைதான் செய்ததாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. 13 சாட்சிகள் மநுவிசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை சித்ரா நடித்த முதல் திரைப்படமான கால்ஸ் படத்தின் டிரைலரை சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அப்படத்தில் நடிகை சித்ரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெ.சபரிஷ் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது. தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் கால்ஸ் படத்தில் வினோதினி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான 5 நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனையை படைத்துள்ளது. மேலும் யூடியூபில் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. வானத்தில் சில ஆண்டுகள் நட்சத்திரமாக மின்னிய சித்ரா இப்படி திடீரென மறைந்து விட்டாலே என்று பல ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X