twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்வி சேகர் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்!

    By Shankar
    |

    S ve Shekher
    யார் ஆட்சிக்கு வந்தாலும் 'கல்வீச்சு' தொடரும் என்பதற்கு உதாரணமாக, நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான எஸ்வி சேகர் வீட்டு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கினர்.

    கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் மைலாப்பூரில் போட்டியிட்டு எம்எல்ஏவானவர் எஸ்வி சேகர். ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் ஜெயலலிதாவின் அதிருப்திக்கு இலக்காகி, திமுக முகாமுக்கு தாவினார். ஆனால் கட்சியில் சேரவில்லை. பின்னர் பாஜக ஆதரவாளராக இருந்தவர், தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்தத்தேர்தலில் மைலாப்பூரில் மீண்டும் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் காங்கிரஸ் மறுத்துவிட்டது. அந்தத் தொகுதியில் தன் மனைவியை முதலில் நிறுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேவி தங்கபாலு, பின்னர் தானே வேட்பாளராக மாறினார்.

    இதனால் எஸ்வி சேகருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. எஸ்வி சேகரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார் தங்கபாலு. ஆனால் அவரோ ஜிகே வாசன், இளங்கோவன் ஆதரவுடன் கட்சியில் தொடர்கிறார்.

    நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. கேவி தங்கபாலு படுதோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், நேற்று இரவு மந்தைவெளியில் உள்ள எஸ் வி சேகர் வீடு கல்வீசித் தாக்கப்பட்டுள்ளது.

    இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நான் ஜெயலலிதாவை மதிப்பவன்-எஸ்.வி.சேகர்:

    இந்நிலையில் இன்று நிருபர்களை சந்தித்தார் சேகர். அவரது பேட்டி..

    கேள்வி: தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு இது திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் தோல்வி என்று கூறியுள்ளாரே?

    பதில்: குஷ்பு அரசியலுக்கு புதுசு. அனுபவம் இல்லாதவர், மக்கள் தீர்ப்பை எப்போதும் கெளரவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    கேள்வி: சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் இப்போது அதிமுகவில் இல்லையே என்ற வருத்தம் உள்ளதா?

    பதில்: நான் எப்போதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் திமுக தலைவர் கருணாநிதியையும் மதிப்பவன். 2 பேருமே எனக்கு நண்பர்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள் அரசியல் பகையை மறந்து நண்பர்களாக இருப்பது போல, நானும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதிமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன். தற்போது அதற்காக வருத்தப்படவில்லை என்றார்.

    English summary
    Some unidentified persons thrown stones on former MLA S Ve Shekher's Pattinappakkam house on yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X