Cannes 2023 - கேன்ஸ் திரைப்பட விழா.. பாரம்பரிய வேட்டி, சட்டையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

கேன்ஸ்: Cannes 2023 (கேன்ஸ் 2023) உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கலந்துகொண்டார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்து சினிமாத் துறையில் உலகப் புகழ் பெற்ற விழா 'கேன்ஸ் திரைப்பட விழா. பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நாளை இன்று தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றனர்.

Union Ministe L.Murugan wearing heritage dress at Cannes 2023

திரையிடப்படும் படங்கள்: இந்தியாவில் இருந்து, அனுராக் காஷ்யப் இயக்கி பிரபல நடிகை சன்னி லியோன் நடித்த 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும்; ராகுல் ராய் நடித்த 'ஆக்ரா' படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான 'இஷானோ' படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படவுள்ளன. இதன் காரணமாக இந்திய திரைத்துறையினரும், திரையிடப்படும் படங்களில் பணியாற்றியவர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

சிவப்பு கம்பள வரவேற்பில் யார் யார்?: இந்த விழாவின் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் வரவேற்பில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். முக்கியமாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இந்த சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Union Ministe L.Murugan wearing heritage dress at Cannes 2023

முருகன் தலைமையில் குழு: மேலும், மத்திய இணையமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற The Elephant whisperers ஆவண படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கியா, கடந்த 2017ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற அசத்திய மனுஷி சில்லார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களும் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கெடுப்பார்கள் என கூறப்பட்டிருந்தது.

பாரம்பரிய உடையில் முருகன்: இந்நிலையில் இன்று நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில் எல்.முருகன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். அவர் அவ்வாறு சென்றது அங்கிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் அணிந்திருந்த சட்டையின் இடப்பக்கத்தில் இருந்த துண்டில் தேசிய கொடியையும், வலப்பக்கத்தில் ஜி20 லோகோவை மூவர்ணத்தில் வலப்பக்கத்திலும் குத்தியிருந்தார். இதுவும் பலரையும் ரசிக்க வைத்தது.

இதனையடுத்து பேசிய அவர், "சட்டையில் இருக்கும் எம்பிராய்டரி எனது உள்ளூர் தையல்காரரால் செய்யப்பட்டுள்ளது. என் மார்பில் மூவர்ணக் கொடியை அணிந்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நாங்கல் ஜி20யில் எங்களது பல பாரம்பரிய நிகழ்வுகளை செய்துவருகிறோம். அதை இந்த உலகுக்கும் நாங்க சொல்வதே பொருத்தமாக இருக்கும்" என்றார். சென்ற ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X