300 ஏக்கர் ரோஜாத் தோட்டத்தில் விக்ரம் டூயட்… ஷங்கரின் ‘ஐ’ பற்றி சுவாரசியத் தகவல்கள்!
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் பற்றி நாளுக்கு ஒரு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. படம் ரிலீஸ் ஆக தயாராக உள்ள நிலையில் ஐ படத்தினைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியள்ளன.
ஐ படத்தில் குத்துச்சண்டை வீரராக விக்ரம் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ஐ ஒரு விளையாட்டை பற்றிய படம் அல்ல. சாதாரண மனுஷன் அமானுஷ்ய சக்தி பெற்றவனாக மாறி என்ன செய்கிறான் என்கிற கதை. அது மாய மந்திரமோ, தெய்வ சக்தியோ அல்ல, விஞ்ஞான ரீதியாக கிடைக்கும் அமானுஷ்ய சக்தி என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

வித்தியாசத் தோற்றங்களில் விக்ரம்
விக்ரம் 50 கிலோ கொண்ட ஒல்லி பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், அந்நியன் ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர நான்கு கெட்அப்கள் இருக்கிறது.

மேக் அப் செலவு ரூ.5 கோடி
விக்ரமிற்கு நியூசிலாந்தை சேர்ந்த வேட்டா நிறுவனம் மேக்-அப் போட்டிருக்கிறது. விக்ரம் மேக்அப் போட்டுக் கொண்டால் அது கலையாமல் இருக்க மைனஸ் டிகிரி குளிர் வேண்டுமாம். இதற்கென்றே ஒரு ஆள் மட்டும் அமர்ந்து கொள்கிற தனி பிரிசரை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மேக்அப் செலவு மட்டும் 5 கோடி.

300 ஏக்கர் ரோஜாத் தோட்டம்
கொடைக்கானலில் 300 ஏக்கரில் விதவிதமான ரோஜாக்களை பயிரிட்டு வளர்த்து வெவ்வேறு காலகட்டங்களில் படப்பிடிப்பு நடத்தி ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்களாம். ஒரு பாடலில் மிருகங்களைப் போல கெட் அப்பிலும் வருகிறாராம் விக்ரம்.

ரஹ்மான் - அனிருத்
மொத்தம் 5 பாடல்கள், அதில் "என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்..." என்கிற பாடலை ஏ.ஆர்.ரகுமானும், இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை பாடல் ஒன்றை அனிருத்தும் பாடி உள்ளனர்.

5 நாடுகளில் பாடல் வெளியீடு
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை 5 நாடுகளில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். சென்னையில் நடக்கும் விழாவில் ஒரு பிரபல ஹாலிவுட் ஹீரோ கலந்து கொள்கிறார். சில்வஸ்டர் ஸ்டோலன், டாம் குரூஸ், அர்னால்ட் இந்த மூவரில் ஒருவராக இருக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல்
இரண்டு வருடங்கள், நான்கு மாதங்கள் ஆகியிருக்கிறது படத்தை உருவாக்க. சீனாவில் 2 மாதங்கள் தங்கியிருந்து 40 சதவிகித படத்தை எடுத்திருக்கிறார்கள்.

பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள்
சீனா சண்டைக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அந்தரத்தில் நடக்கும் சைக்கிள் சண்டையும், ஒரிசாவில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படத்தின் ஹைலெட்டாக இருக்கும். சீன சண்டைக்கு ஒரு மாதமும், ஒரிஸா சண்டைக்கு 25 நாளும் ஆகியிருக்கிறது.

ரூ.150 கோடி செலவில்
படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி. இந்திய மொழிகள் 6, உலக மொழிகள் 14 என 20 மொழிகளில் ரிலீசாகிறது ஐ என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











