twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒவ்வொருவரும் தனித்துவத்தோடு பாடுங்கள் ஜெயிக்கலாம் - லதா மங்கேஷ்கர்

    |

    மும்பை: என்னுடைய பெயர் அல்லது பாடல்கள் மூலம் யாராவது பயனடைந்தால், அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் மற்றவரின் சாயலை வைத்து மட்டுமே ஒருவரால் ஜெயிக்க முடியாது. எந்த ஒரு செயலாக இருந்தாலும் தனித்துவம் என்பது மிக மிக முக்கியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கூறினார்.

    இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் ஒரு முறையாவது லதா மங்கேஷ்கரின் பாடலை ரகசியமாவது பாடி சந்தோசபட்டிருப்பார்கள். ஆனால், நிச்சயம் அனைவராலும் ஒரு புகழ் பெற்ற பாடகராக முடியாது. ஒரு சிலரால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வேண்டும். அப்போது தான் அவர்களால் சாதிக்க முடியும்.

    Uniqueness is the most important thing in any one-Lata Mangeshkar

    சில தினங்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கரின் ஏக் பியார் கா நக்மா ஹை பாடலை பாடி பிரபலமானவர் ரநுல் மண்டோல் (Ranu Mondal). மேற்கு வங்காளத்தின் ரணகாட்(Ranaghat) ரயில் நிலையத்தில் இருக்கும் ரநுல் மண்டோல் லதாஜியின் தெய்வீகக் குரலில் ஒரு பாடலை பாடிய ஒரு வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரயில் நிலையத்தில் பாடிய இந்த பாடகி இப்போது பாலிவுட்டின் பின்னணி பாடகி. இவரை ஸ்டுடியோவிற்கு அழைத்து வந்த பெருமை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியாவையே சேரும். அவருடன் இணைந்து ரநுல் மண்டோல் ஒரு பாடலும் பாடியுள்ளார். அந்த வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி இன்ஸ்டாகிராம், சமூக வலைதளம் என அனைத்து சமூக வலைதளங்கள் மூலமும் ரநுல் மண்டோல் பிரபலமானார்.

    இது குறித்து ஆசியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரிடம் கேட்ட போது ரநுல் மண்டோலுக்காக அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். என்னுடைய பெயர் அல்லது பாடல்கள் மூலம் யாராவது பயனடைந்தால், அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் மற்றவரின் சாயலை வைத்து மட்டுமே ஒருவரால் ஜெயிக்க முடியாது. என்னுடைய பாடல் அல்லது ரஃபி சாப், முகேஷ் பய்யா, ஆஷா போஸ்லே போன்றவர்கள் குரலின் சாயலிலோ பாடினால் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே வெற்றியை பெறலாம். அது நீடித்து நிலைக்காது.

    இன்று தொலைக்காட்சிகளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் குழந்தைகள், என்னுடைய பாடல் மட்டுமின்றி அனைத்து பாடகர்களின் பாடல்களையும் மிக அழகாக பாடுகிறார்கள் ஆனால் எத்தனை நாட்களுக்கு அவர்கள் நினைவில் இருப்பார்கள். அவர்களுக்கென ஒரு தனிப்பாதையை அமைத்துக் கொள்ளவேண்டும். சுனிதி சவுகான் மற்றும் ஸ்ரேயா கோசல் போன்ற வெகு சிலர் தான் தனக்கென்று தனி வழியை கண்டறிந்து அறியப்படுகிறார்கள்.

    எங்களுடைய பாடல்களை பாடுங்கள் ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பிறகு அவரவருடைய சொந்த பாடல்களை தேர்வு செய்ய வேண்டும். அதுவே நிலைக்கும். ஒரு உதாரணத்திற்கு ஆஷா போஸ்லே அவருடைய தனி திறமையில் பாடவில்லை என்றால் இன்றும் என்னுடைய நிழலில் மட்டுமே இருந்திருப்பார். தனித்திறமை ஒருவரை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பதற்கே ஆஷாவே ஒரு மிக பெரிய எடுத்துக்காட்டு என்றார் லதாஜி.

    எனவே எந்த ஒரு செயலாக இருந்தாலும் தனித்துவம் என்பது மிக மிக முக்கியம். அதுவே அவர்களை முன்னிலைப்படுத்தும். ஒருவரின் சாயல் மற்றவர்களை நிலைக்க செய்யாது என்பது தான் நிதர்சன உண்மை.

    English summary
    Uniqueness is the most important thing in any one action. That will highlight them. The reality is that one's image does not make others stand out, said Lata mangeshkar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X