ஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்

Recommended Video

நானும் முருகன் பக்தன் தான் - நடிகர் சிவகுமார் | Actor sivakumar latest video

சென்னை: நடிகர் சூர்யாவும் அவரது தம்பி நடிகர் கார்த்தியும் அவர்களின் ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள், அவர்களுடைய தாய் தந்தையரை காலம் முழுவதும் கண் கலங்காமல் ஒரு குழந்தையை போல் பாவித்து அன்போடு கவனித்து கொள்ளுங்கள் என்பது தான்.

இதை வெறும் வார்த்தையோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் அவர்கள் அதை தங்களது வாழ்வில் செய்து காட்டியும் வருகிறார்கள். இன்றும் சூர்யா, கார்த்தி இருவரும் தங்களது குடும்பத்துடன் தங்களது தாய் தந்தையுடன் தான் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

Unity is the strength of the Sivakumar family

நீ இதை செய், இதை செய்யாதே அப்படி இப்படி என பலரும் பல விதங்களில் தங்களது கருத்துக்களை மற்றவர் மீது திணிக்க தான் செய்கிறார்கள். இதை யாராலும் தடுக்கவே முடியாது. ஆனால் இதில் ஒரு அழகு என்னவென்றால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை எத்தனை பேர் தங்களது சொந்த வாழ்வில் கடைபிடிக்கிறார்கள் என்றால் அது மிகவும் சொச்சமாக தான் இருக்கும். இது எதார்த்தம்.

ஆனால் அதிலும் சிலர் விதிவிலக்குகளாக இருப்பர். அப்படி இரு உத்தம மகன்களை பெற்றெடுத்தவர் தான் நடிகர் சிவகுமார். இதை அவர் மிகுந்த பெருமையுடன் கூறுகிறார். அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாய் இருந்து வருகிறார்கள் நடிகர் சூர்யா குடும்பத்தினர். அங்கு பல விழாக்கள் நடைபெறும். ரசிகர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்கள் பற்றி சூர்யா விசாரிப்பது வழக்கம்.

எங்கு இருந்தாலும் சரி ரசிகர்களிடம் அவர் வைக்கும் வேண்டுகோள் அவரவரின் தாய் தந்தையினரை காலம் முழுவதும் நன்றாக பார்த்துக்கொள்வதோடு அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள் என்று தான். அவர்களின் முதுமை காலத்தில் ஒரு குழந்தையைப் போல் பாவித்து அன்போடு கவனித்து கொள்ளுங்கள் என்பதே, அவர் ஒவ்வொரு முறையும் மேடையில் பேசும் போது ரசிகர்களிடம் கேட்கும் வேண்டுகோள்.

சொல்லி வைத்து போல் அண்ணன் சூர்யாவும் சரி, தம்பி கார்த்தியும் சரி இதையே தான் அவர்கள் இருவரும் ரசிகர்களிடம் உச்சரிக்கும் வார்த்தைகள். இதை வெறும் வார்த்தையோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் அவர்கள் அதை தங்களது வாழ்வில் செய்து காட்டியும் வருகிறார்கள். இன்றும் சூர்யா, கார்த்தி இருவரும் தங்களது குடும்பத்துடன் தங்களது தாய் தந்தையுடன் தான் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஒற்றுமையை பார்த்து சக நடிகர்களே வியந்து பார்க்கிறார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் சிவகுமார் குடும்பம் மட்டும் ஐரோப்பா நாடுகளுக்கு 20 நாட்கள் சுற்றுலா சென்று திரும்பி வந்துள்ளார்கள். தங்களது பிஸியான ஷெட்யூலுக்கு இடையிலும் சிவகுமார் அவரது மனைவி, சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா இவர்கள் மட்டும் இந்த சுற்றுலாவிற்கு சென்று வந்துள்ளனர்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா, குழந்தைகள், கார்த்தியின் மனைவி மற்றும் குழந்தைகள், பிருந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் என இவர்கள் யாரும் அந்த சுற்றுலாவிற்கு செல்லவில்லை என்பது தான் அங்கு ஹை லைட். சிவகுமாரின் மனைவி, மகள், மகன்களோடு மட்டும் லண்டன், பாரிஸ், வெனிஸ், பிரான்ஸ் என்று 20 நாட்கள் ஜாலியாக சுற்றி பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதை ஒரு சஸ்பென்ஸ் சுற்றுலாவாக பிளான் செய்துள்ளார்கள். திரையுலகின் ஒட்டு மொத்த கண்ணும் சிவகுமார் குடும்பத்தின் மீது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X