விஜய்க்கு எல்லா தீயப்பழக்கங்களும் உள்ளதா?.. பகீரைக் கிளப்பிய ஆடியோ.. குண்டைத் தூக்கிப்போட்ட பிரபலம்!

சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களில் ஒருவர். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தொடர் வெற்றிகளைக் குவித்து வருகின்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனாக இருக்கும் விஜய், தான் சினிமாவில் இருந்து விலகுவதாகவும், தமிழ்நாடு அரசியலில் முழுநேரமாக ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். இதனால் விஜய் தற்போது தனது கடைசி படமான, இன்னும் தலைப்பிடப்படாத தளபதி 69 படத்தில் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் விஜய்க்கு அனைத்து கெட்டப் பழக்கங்களும் உள்ளது என்ற ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த ஆடியோவை பிரபல அரசியல்வாதியான திருச்சி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி, சரியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. இப்படியான நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார் விஜய். சுமார் 50 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசியல் களத்தில், இந்த மாநாடு பெரும் கவனிப்பினைப் பெற்றது.

thiruchi suriyaa tvk vijay thalapathy vijay

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தாக்கத்தினை ஏற்படுத்தும், என பல அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், நடிகர் விஜய்க்கு அனைத்து தீய பழக்கங்களும் உள்ளது என்ற ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக இந்த ஆடியோவை, பிரபல அரசியல் பிரமுகர் திருச்சி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், " புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஆசை. விஜய்க்கு எல்லா தீய பழக்கங்களும் உண்டு, நாங்கள் ரகசியமாக பகிர்ந்து கொள்வதை வெளியில் கசிய விடுகிறார் புஸ்ஸி ஆனந்த்" என மேற்கோளும் இட்டுள்ளார். மொத்தம் 3 நிமிடங்கள் 46 நொடிகள் கால அளவுக்கு அந்த ஆடியோ உள்ளது.

thiruchi suriyaa tvk vijay thalapathy vijay

தீய பழக்கங்கள்: குறிப்பாக அந்த ஆடியோவில், " விஜய்யை பயன்படுத்திக் கொண்டு, பாண்டிச்சேரி முதலமைச்சர் ஆகிவிட்டு, கடைசியில் தூக்கி எறிந்துவிடுவார். மேலும் அவர் பாம்புவைப்போல் எப்போது வேண்டுமானாலும் கொத்துவார். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் நான் விஜய்யின் உதவியாளரிடம் பேசினேன். ஏதாவது கெட்டப் பழக்கங்கள் உள்ளதா? எனக் கேட்டேன். உடனே அவர் இல்லை எனக் கூறினார். உங்க தலைவருக்கு இருக்கின்றதா எனக் கேட்டார், அதற்கு உடனே அந்த உதவியாளர் அதெல்லாம் எல்லா பழக்கங்களும் உள்ளது எனக் கூறியதாகவும் அந்த ஆடியோவில் இருவர் பேசிக்கொள்கின்றனர்.

thiruchi suriyaa tvk vijay thalapathy vijay

அதிர்ச்சி: மேலும் இந்த ஆடியோவில் பாண்டிச்சேரி முதலமைச்சர் ஆக முயற்சி செய்யப்போவது புஸ்ஸி ஆனந்த் என்றும், விஜய்யைப் பயன்படுத்திவிட்டு அவரைத் தூக்கி எறிந்து விடுவார் எனவும் பேசிக்கொள்வதால் இந்த ஆடியோ தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் விஜய்க்கு எல்லா தீய பழக்கங்களும் உள்ளதா எனவும் அதிர்ச்சியோடு கேட்டு வருகின்றனர்.

thiruchi suriyaa tvk vijay thalapathy vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X