அஜித்-ஷாலினி கல்யாணத்தில் நடந்த அந்த விஷயம்.. வியந்து போன விஜபிக்கள்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: திருமணம் செய்து கொண்டால் அஜித் மற்றும் ஷாலினி போல மனம் ஒத்த தம்பதியாக வாழவேண்டும் என்று, சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் நினைத்து வருகின்றனர். அப்படி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இருக்கும் அஜித் மற்றும் ஷாலினி திருமணத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து பிரபலம் ஒருவர் கூறியுள்ளது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு துணிவு திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தை தொடர்ந்து அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

unknown details about ajith kumar and shalini marriage

அஜித்- ஷாலினி: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பேபிஷாலினி, குழந்தை நட்சத்திரமாகவே 55க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் க்யூட்டான அழகும் பேச்சும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். குழந்தையாக பல படத்தில் நடித்த ஷாலினி கதாநாயகியாக 7 படங்களில் மட்டுமே நடித்தார். தமிழில் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அமர்களம் படத்தில் காதல்: அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். இதையடுத்து, அஜித் ஷாலினி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அமர்க்களம் படத்தின் ஷுட்டிங்கின் போது நடிப்பைத் தாண்டி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறை காட்டத் தொடங்கி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அஜித் செய்த அந்த விஷயம்: அப்படி நடந்த இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பொதுவாக பிரபலங்களின் திருமணத்தில் எந்த விஐபிக்களும் சாப்பிட மாட்டார்கள். விஐபிக்கள் சாப்பிடாததால் பிரபலங்களின் கார் ஓட்டுநர்களுக்கு சாப்பிட முடியாமல் அப்படியே சென்றுவிடுவார்கள். இதை நன்கு தெரிந்து கொண்ட அஜித். தனது திருமணத்திற்கு விஜபிக்களின் கார் வந்து நிற்கும் இடத்தில் அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுநருக்கு கையோடு கல்யாணத்தில் போடப்படும் சாப்பாட்டை ஒரு கவரில் வைத்தும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டதாம்.

பாராட்டும் ரசிகர்கள்: இதனால் அந்த ஓட்டுநர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதுவரை எந்த நட்சத்திர கல்யாணத்திலும் இப்படி ஓரு விஷயம் நடக்கவில்லை. அஜித் திருமணத்தில் முதலில் நடந்த விஷயம் அடுத்து சூர்யா-ஜோதிகா திருமணத்தில் நடந்ததாம். இந்த தகவலை பிஆர்ஓ நிகில் முருகன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன இந்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளதால், அஜித்தின் ரசிகர்கள் இதைவைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X