twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 ரஜினி, 12 அக்‌ஷய், இன்னும் நிறைய இருக்கு: 2.0 பற்றி வெளிவராத உண்மைகள்

    |

    சென்னை: 2.0 திரைப்படத்தை பற்றிய முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்.

    லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 2.0. இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இப்படம் பல ஆச்சர்யங்களையும், புதுமைகளையும் உள்ளடக்கியுள்ளது.

    பாகுபலி

    பாகுபலி

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளுக்கு சேர்த்து இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் சுமார் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்கு முன்பு பாகுபலி திரைப்படம் அதிகபட்சமாக ரூ. 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நல்ல ரோபோவுக்கும், கெட்ட ரோபோவுக்கும் இடையே நடக்கும் மாபெரும் யுத்தம் தான் படத்தின் கதை. எந்திரன் திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து இப்படத்தின் கதை துவங்குகிறது. அதாவது 2050 ல் நடப்பதுபோல கதையமைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் சிட்டி, வசீகரன் கதாபாத்திரங்களைத் தாண்டி இன்னும் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறார் ரஜினி என சொல்லப்படுகிறது. டாக்டர் ரிச்சர்டு என்ற பெயரில் வில்லனாக நடித்திருக்கும் அக்ஷய் குமார் 12 கெட்டப்பில் அசத்த உள்ளார்.

    சம்பளம்

    சம்பளம்

    இப்படத்தில் வில்லனாக நடிக்க, கமல்ஹாசன், விக்ரம், ரித்திக் ரோஷன் மற்றும் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் போன்றவர்களை முயற்சித்தார் ஷங்கர். சில காரணங்களால் அவை நடக்காமல் போக இறுதியாக அக்ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அக்ஷய் குமாருக்கு ரூ. 40 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது.

    கிளைமேக்ஸ்

    கிளைமேக்ஸ்

    இப்படத்தின் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். ஆசிய அளவில் இவ்வளவு பேர் பணியாற்றிய முதல் படம் 2.0. பெரும்பாலும் திரைப்படத்தை 2டி முறையில் படமாக்கிவிட்டு பிறகு 3டியாக கன்வர்ட் செய்வதே வழக்கம். ஆனால் இந்தியாவிலேயே முதல்முறையாக 2.0 மட்டும் தான் முழுக்க முழுக்க 3டியில் படமாக்கப்பட்ட திரைப்படம். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே 15 ஆயிரம் துணை நடிகர்கள் நடித்ததோடு, அனிமேட்ரானிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்ட பத்தாயிரம் பறவைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

    ஹாலிவுட் கலைஞர்

    ஹாலிவுட் கலைஞர்

    இந்தியப் படங்களிலேயே டப்பிங்குக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட படம் 2.0. சுமார் மூன்று மாதங்கள் டப்பிங் மட்டுமே நடந்துள்ளது. ட்ரான்ஸ்பார்மர்ஸ், லைஃப் ஆப் பை போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஷான் வூட்ஸ் மற்றும் கென்னி பேட்ஸ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

    விளம்பரம்

    பல சொகுசுக்கார்கள் வெடித்து மைதானத்திற்குள் விழும் காட்சியை மட்டும் ஒரு மாதம், டெல்லியிலும், சென்னை ஈவிபி பிலிம் சிட்டியிலும் படமாக்கியுள்ளனர். இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ. 540 கோடி. அதில் ரூ. 50 கோடியை விளம்பரத்திற்காக செலவிட திட்டமிட்டுள்ளனர். நாம் பார்க்கப்போகும் ஒவ்வொரு காட்சியுமே, சுமார் மூன்று அல்லது நான்கு கோடி செலவில் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருக்கும்.

    English summary
    2.0 movie unrevealed secrets. This is the only movie, which was shot in 3D format in national level.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X