twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலம் கடந்தும் ஆச்சரியத்தை அள்ளி தரும் சிவாஜி வாழ்க்கையின் அறியப்படாத நிகழ்வுகள்

    |

    சென்னை : நடிகர் திலகம் என அனைவராலும் கொண்டாடப்படும் சிவாஜி கணேசனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு காலத்தால் அழிக்க முடியாத நிலையான இடத்தை பிடித்தவர் சிவாஜி.

    Recommended Video

    Vijay Sethupathi Trend-ஐ 1950-லே செய்த Sivaji Ganesan *Cinema

    50 ஆண்டு கால திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்தவர் சிவாஜி. இதில் தமிழில் மட்டும் 250 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.

    நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்த சிவாஜி கணேசன் 2001 ம் ஆண்டு ஜுலை 21 ம் தேதி காலமானார். அவர் மறைந்து 21 ஆண்டுகள் ஆனாலும் இப்போது வரை நடிப்பு என்று சொன்னாலே சிவாஜி தான் நினைவிற்கு வருவார். அவரது வாழ்க்கையில் நடந்த பலரும் அறியாத, இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் தரும் விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டதா? பரபரப்பாக நடந்த வழக்கு.. என்ன ஆச்சு? சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டதா? பரபரப்பாக நடந்த வழக்கு.. என்ன ஆச்சு?

    சிவாஜிக்கு பாராட்டு விழா நடத்திய எம்ஜிஆர்

    சிவாஜிக்கு பாராட்டு விழா நடத்திய எம்ஜிஆர்

    இப்போது ரஜினி - கமல், விஜய்-அஜித் போல அந்த காலத்தில் ரசிகர்களால் எதிரிகளாக பார்க்கப்பட்டாலும், நிஜத்தில் நல்ல நட்புடன் இருந்தவர்கள் சிவாஜியும் எம்ஜிஆரும். இவர்கள் நடிப்பில் போட்டியாக பார்க்கப்பட்டாலும், சிவாஜிக்கு எம்ஜிஆரே பாராட்டு விழா நடத்தி உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.1960 ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜிக்கு எகிப்து அரசு சிறந்த நடிகர் விருது வழங்கியது. இதற்காக அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பாராட்டு விழா நடத்தினார். அதில் சிவாஜியை கட்டிப்பிடித்து வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.

    பட்டினி கிடந்த சிவாஜி

    பட்டினி கிடந்த சிவாஜி

    கே.எஸ்.கோபாலகிருஷணன் இயக்கத்தில் 'படிக்காத பண்ணையார்' என்ற படத்தில் சிவாஜி நடித்தார். இந்த ரோலுக்காக சிவாஜிக்கு அடர்த்தியான மீசையை பசை போட்டு ஒட்டி உள்ளனர். அதை எடுத்தால் எரிச்சலாக உள்ளது. சாப்பிடுவதற்காக அதை எடுத்தால் மீண்டும் ஒட்டினால் அது சரியாக வருமா என்று தெரியவில்லை என்று சொல்லி அந்த படத்தில் தனது கேரக்டரில் மீசையில் பர்ஃபெக்ஷன் வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார் சிவாஜி.

    500 சவரன் தங்கம் தானம்

    500 சவரன் தங்கம் தானம்

    1965 ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த போது, அப்போதைய பிரதமர் லால் பகதுர் சாஸ்திரியிடம் தனது கமலாவின் 400 சவரன் நகை, தனக்கு பரிசாக கிடைத்த 100 சவரன் தங்க பேனா என மொத்தம் 500 சவரன் தங்கத்தை நாட்டிற்காக கொடுத்தவர் சிவாஜி கணேசன்.

    112 முறை கட்டபொம்மன் வேடம்

    112 முறை கட்டபொம்மன் வேடம்

    வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி நடித்திருக்கிறார் என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் வீரபாண்டி கட்டபொம்மன் நாடகத்தை தொடர்ந்து 112 முறை நடத்தி அதன் முலம் கிடைத்த 32 லட்சத்தை பல கல்லுரிகளுக்கு நன்கொடையாக கொடுத்தவர் சிவாஜி. நாடகத்திற்காக 112 முறை கட்டபொம்மன் வேடம் போட்டவர் சிவாஜி மட்டும் தான்.

    காமராஜருக்கு சிலை வைத்த சிவாஜி

    காமராஜருக்கு சிலை வைத்த சிவாஜி

    அதுவரை நாட்டில் மகாத்மா காந்தி, நேரு போன்றவர்களுக்கு மட்டும் தான் சிலை இருந்தது. ஆனால் காமராஜருக்கு முதல் முறையாக சிலை வைத்தவர் சிவாஜி தான். தமிழகத்தின் பல பகுதிகளிலும் காமராஜரின் சிலையை சிவாஜி அமைத்துள்ளார்.

    அமெரிக்க மேயரான சிவாஜி

    அமெரிக்க மேயரான சிவாஜி

    அமெரிக்காவிற்கு சிறப்பு விருந்தினராக 1962-ம் ஆண்டு சிவாஜி கணேசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

    ஒரே நபர் சிவாஜி தான்

    ஒரே நபர் சிவாஜி தான்

    எகிப்து நாட்டின் அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வந்த போது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான். அந்த அளவிற்கு அந்த காலத்திலேயே இந்திய அளவில் கெளரவம் மிக்க மனிதராக விளங்கி உள்ளார் சிவாஜி.

    English summary
    Today Legendary actor Sivaji Ganeshan's 21st death anniversary. In this occasion here we discussed about unknown moments of Sivaji Ganeshan's life. This will really surprising for everyone who read this.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X