டிடி தம், தண்ணி அடிக்க மாட்டார்: ஏன் தெரியுமா?

By Siva

Recommended Video

பயம், போதை, படுத்த படுக்கை - டிடி

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

டிடி

டிடி

2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி பெண் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை டைம்ஸ். இந்த பட்டியலில் டிடிக்கு தான் முதல் இடம் கிடைத்துள்ளது.

முதலிடம்

முதலிடம்

அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி பிரபலமாக தேர்வு செய்யப்பட்டதில் டிடி மகிழ்ச்சியில் உள்ளார். மக்களுக்கு என்னை பிடிக்கும் என்று தெரியும், ஆனால் விரும்பப்பட்டவளாக இருப்பது தெரியாது என்கிறார் டிடி.

கேமரா

கேமரா

கேமராவுக்கு முன் வந்து நிற்க தற்போதும் நான் பயப்படுகிறேன். புதுப் படம் அல்லது நிகழ்ச்சியின் ஷூட்டிங் துவங்கும் முன்பு பயத்தில் நான் வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது என டிடி தெரிவித்துள்ளார்.

சைக்கிள்

சைக்கிள்

எனக்கு தனியாக சாலையை கடந்து செல்லத் தெரியாது. எனக்கு சைக்கிள் மட்டுமே ஓட்டத் தெரியும். ஸ்கூட்டரோ, காரோ ஓட்டத் தெரியாது. கற்கவும் முயற்சி செய்யவில்லை என்று டிடி கூறியுள்ளார்.

சிகரெட்

சிகரெட்

எனக்கு 13-14 வயது இருக்கும்போது மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ மாட்டேன் என்று என் தந்தைக்கு வாக்குறுதி அளித்தேன். அதனால் தற்போது வரை அதை நான் செய்தது இல்லை. மது அருந்துவோரின் அருகில் இருந்தாலும் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றியது இல்லை என்கிறார் டிடி.

பிரேக்

பிரேக்

2 ஆண்டுகளுக்கு முன்பு நான் டிவியில் இருந்து பிரேக் எடுத்தேன். நான் பிரேக் எடுத்ததற்கான காரணம் மக்களுக்கு தெரியாது. என் முழங்காலில் பாதிப்பு ஏற்பட்டு நான் இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் நான் குணமடைந்து நன்றாக நடக்கிறேன் என டிடி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X