அய்யோ, ராதாரவி 'அப்படி' சொல்லியும் கூட யாரும் என்னை கண்டுக்கலையே: 90 எம்.எல். இயக்குநர்
Recommended Video

சென்னை: ராதாரவி சொல்லியும் கூட யாரும் என்னை கண்டு கொள்ளவில்லையே என்கிறார் இயக்குநர் அனிதா உதீப்.
ராதாரவி நயன்தாராவை மட்டும் அல்ல 90 எம்.எல். படத்தையும் கேவலமாக விமர்சித்தார். இந்நிலையில் அந்த 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப்புக்கு ஒரு ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது ராதாரவி எல்லாம் டிரெண்டாகும்போது நம்மால் முடியவில்லையே என்று கவலைப்பட்டுள்ளார்.
ராதாரவி
திரைத்துறையில் இருப்பவர்களிலேயே பெண்களுக்கு எதிரானவர்களில் நான் தான் சிறந்தவர் என்று ராதாரவி கூறியும் யாரும் என்னை கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். என் ஜூனியர்கள்( வயதான அங்கிள்ஸ்) எல்லாம் டிரெண்டாகிறார்கள். நான் எப்படி அவர்களை முந்துவது? ஐடியா- தென்னிந்திய சினிமாவில் உள்ள வெற்றிகரமான பெண்களை மேடையில் அசிங்கப்படுத்த வேண்டும் என்று அனிதா நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.
நியாயம்
ராதாரவி பேசியது தவறு தான். ஆனால் உங்களின் 90 எம்.எல். படத்தை நியாயப்படுத்த வேண்டாம் என்கிறார் ஒருவர்.
குரல் கொடுத்தவர்கள்
90 எம்.எல். படத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் தற்போது எங்கே போனார்கள்? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொந்த பெயர்
டைட்டில் கார்டில் சொந்த பெயரை போடாதவர்கள் எல்லாம் ராதாரவியை பற்றி பேசக் கூடாது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











