Leo Trailer - சன் டிவிக்கும் விஜய்க்கும் பஞ்சாயத்தா?.. அதெல்லாம் இல்லைங்க.. லியோ ட்ரெய்லர் மூலம் கிடைத்த விடை

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ ட்ரெய்லர் மூலம் சன் டிவிக்கும் விஜய்க்கும் எந்த பஞ்சாயத்தும் இல்லை என்று உறுதியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. கோலிவுட்டின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் டாப்பில் இருக்கும் படம் என்றால் அது லியோதான். ஏனெனில் இதற்கு முன்னர் வெளியான விஜய் படங்களான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களின் தோல்வியாலும் வரிசையாக ஹிட் கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் மீண்டும் இணைந்திருப்பதாலும் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Unleashing the Leo Trailer on Oct 5th only on Sun TV YouTube channel

இந்த மாதம் ரிலீஸ்: லியோ படமானது இந்த மாதம் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படமும் ரிலீஸுக்கு முன்னதாகவே 400 கோடி ரூபாய்வரை பிஸ்னெஸ் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

லியோ ட்ரெய்லர்: லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் கொடுத்து மகிழ்விப்போம் என படக்குழு தெரிவித்தது. அதன்படி செகண்ட் சிங்கிள் வெளியானது. அதனையடுத்து அக்டோபர் 5ஆம் தேதி லியோ ட்ரெய்லர் ரிலீஸாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

சன் டிவியில் ரிலீஸ்: இந்நிலையில் லியோ ட்ரெய்லர் எதில் ரிலீஸாகும் என்பது தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ட்ரெய்லரானது சன் டிவி யூட்யூப் சேனலில் வெளியாகவிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் டிவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதற்கிடையே சென்னையின் முக்கிய இடங்களிலும் திரைகள் அமைத்து லியோ ட்ரெய்லர் திரையிடப்படலாம் என கூறப்படுகிறது.

Unleashing the Leo Trailer on Oct 5th only on Sun TV YouTube channel

பஞ்சாயத்துலாம் இல்லை: முன்னதாக ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது சூப்பர் ஸ்டார் ரஜினியா இல்லை விஜய்யா என்ற பஞ்சாயத்து பீக்கில் இருந்தது. அப்போது மேடையில் கலாநிதி மாறன் பேசியது விஜய்க்கு எதிரானது என்று ஒருதரப்பினர் கிளப்பிவிட்டனர். அதுமட்டுமின்றி ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் விஜய்யை பற்றி அட்லீ உள்ளிட்டோர் புகழ்ந்து பேசினர்.

அந்த ஆடியோ வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால் ஒளிபரப்பானதில் விஜய் பற்றிய பேச்சுக்கள் எடிட் செய்யப்பட்டிருந்தன. எனவே விஜய்க்கு எதிராக சன் குழுமம் களமிறங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் சன் டிவியில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவிருப்பதை அடுத்து விஜய்க்கும் சன் டிவிக்கும் எந்த பஞ்சாயத்தும் இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக திரைத்துறையினரும், விஜய் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X