லாரி மோதி 'உண்மை' பட இயக்குநர் படுகாயம்

சுஜிபாலா நடிக்கும் உண்மை படத்தை இயக்கி நடித்து வருகிறார் பி.ரவிகுமார். சுஜிபாலாவுடன் திருமணம் நிச்சயமாகி, பின் அது ரத்தாகி ஏக சர்ச்சைகளைக் கிளப்பிய அதே ரவிக்குமார்தான் இவர்.
திருமண சர்ச்சைகள் ஓய்ந்து, பட வேலைகளில் பிஸியாகியுள்ளார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளது.
இதற்காக ரவிகுமார் லோகேஷன் பார்க்க சென்றிருந்தார். மும்பை அந்தேரியில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வெர்சோவா பகுதியில் சிக்னலை கடந்த போது பின்னால் வந்த லாரி அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவிகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரவிகுமாரின் விலா எலும்பிலும் கையிலும் பலத்த அடிபட்டுள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications