ஆத்தாடி யார பாக்குறதுனே தெரியலையே.. இந்த வயசிலும் கும்முனு இருக்கும் 90ஸ் நடிகைகள்!
சென்னை: அஜித்துடன் ஜோடி போட்டு நடித்த மாளவிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அசத்தலானா போட்டோவை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நடிகை மாளவிகா தமிழ் திரைப்படங்களைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழி படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்த விலகி இருக்கும் இவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

உன்னைத்தேடி மாளவிகா: மாடல் அழகியான மாளவிகா 1999ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கனவு கன்னி: நடிகை ரோஜாவின் சாயலில் வந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை மாளவிகா. அழகும் திறமையும் இருந்த போதும் அவருக்கு ஏனோ படவாய்ப்பு சரியாக அமையவில்லை. தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற மாளவிகா ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழிலுக்கு வந்தார்.
சினிமாவை விட்டு விலகினார்: இதையடுத்து, 2007ம் ஆண்டு சுமேஷ் என்கிற தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா இணையத்தில் ஆக்டிவாக உள்ளார்.
ஆத்தாடி யார பாக்குறதுனே தெரியலையே: தற்போது, இவர் மின்னலே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து இளசுகளின் கனவு கன்னியாக இருந்த ரீமா சென்னுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி யார பாக்குறதுனே தெரியலையே என்றும், ஏ எதிரே ரெண்டு பாப்பா கை வச்ச என்ன தப்பா என பாடலை பாடி இருவரையும் வர்ணித்து வருகின்றனர்.
மும்பையில் செட்டில்: நடிகை ரீமா சென், பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்து பிரபலமான இவர், 2012 ஆம் ஆண்டு சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு ருத்ரவீர் சிங் என்கிற மகன் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











