சங்கர் மகாதேவன் தேடிய தோட்டத்து பாடகர் யார்?: கண்டுபிடித்த விக்னேஷ் சிவன், வாய்ப்பளித்த சாம்
Recommended Video

சென்னை: தோட்டத்தில் அமர்ந்து விஸ்வரூபம் பட பாடலை அழகாக பாடிய நபர் யார் என்று தெரிந்தால் கூறுமாறு இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் கேட்டார். அந்த நபரின் விபரம் தெரிய வந்துள்ளது.
விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான சங்கர் மகாதேவனும், கமல் ஹாஸனும் சேர்ந்து பாடிய உன்னை காணாது நான் இன்று நானில்லையே என்ற பாடலை யாரோ ஒருவர் தோட்டத்தில் அமர்ந்து அழகாக பாடிய வீடியோ வெளியானது.
அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அந்த நபர் யார் என்று கேட்டிருந்தார் சங்கர் மகாதேவன்.
விக்னேஷ் சிவன்
தோட்டத்தில் அமர்ந்து பாடல் பாடியவர் மிஸ்டர் உன்னி என்று கூறி அவரின் செல்போன் எண்ணை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இசை
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த நோட்டா பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தனது புதிய ஆல்பத்தில் உன்னியை பாட வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
திறமை
திறமை இருந்தால் போதும் வாய்ப்பு உங்களை தேடி வரும் என்பதற்கு உன்னி தான் சிறந்த உதாரணம். தொழில்நுட்பத்தின் உதவியால் உன்னிக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.
பாராட்டு
உன்னிக்கு வாய்ப்பு அளிக்கும் சாம் மற்றும் உன்னியின் விபரத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











