வேகமெடுக்கும் ஜெயிலர்..ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்.. லீவ் கொடுத்த தங்கமான முதலாளி!

சென்னை: ஜெயிலர் திரைப்படம்10ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று மதுரை Uno Aqua Care நிறுவனம் அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலராக நடித்துள்ள திரைப்படம் தான்ஜெயிலர்.

uno aqua company informs Free tickets and leave for its employees on jailer

இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமன்னாவிடன் ஆட்டம்: ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவாலா பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்த பாடலில் தமன்னா ஆடிய ஆட்டம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக சோஷியல் மீடியாவில் காவாலா பீவர் வைரலாகி குழந்தைகள் உள்பட பலர் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு ரிலீஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஹிட்டடித்த பாடல் : முதல் பாட்டே மாஸ் காட்டிய நிலையில் இரண்டாம் பாடலாக ஹூக்கும் பாட்டு, இங்க நான் தான் கிங்கு, இங்கு நான் வெச்சது தான் சட்டம் என்று ஒவ்வொருவரியும் சும்மா விஜய்க்கு கவுண்டர் கொடுப்பது போல அமைத்து இருந்தது. இந்த பாடலை ரஜினி ரசிகர்களை வைரலாக்கி இணையத்தையே தெறிக்கவிட்டனர்.

காக்கா, கழுகு கதை: இந்த பாடல் வரியே மிகப்பெரிய சர்ச்சையான நிலையில். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதை, குறைக்குற நாயும் இல்லை, குறை சொல்லாத ஊரும் இல்லை என்று பஞ்ச வசனத்தை ரஜினிகாந்த் பேசி சும்மாகிடந்த ரசிகர்கனை உசுப்பு ஏற்றிவிட்டார். இதனால், ரசிகர்கள் இந்த படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

uno aqua company informs Free tickets and leave for its employees on jailer

ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்: இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த Uno Aqua Care என்ற நிறுவனம் ஆகஸ்ட் 10ந் தேதி அன்று பணியாளர்களுக்கு விடுமுறை கொடுத்து விடுமுறையும் அளித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் அனுப்பியுள்ள அறிக்கையில், ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து இலவச டிக்கெட்டும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தங்கமுதலாளி: மேலும் இந்த விடுமுறையானது தங்களின் அனைத்து கிளைகளுக்கு உட்படும் என்றும், வாழ்க ரஜினிகாந்த் என்று அந்த அறிக்கை அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஊழியர்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்து விடுமுறையும் அளித்துள்ள இந்த நிறுவனத்தின் செயல் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் எங்க முதலாளி தங்க முதலாளி என கருத்துக்களை பகிர்ந்து அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X