சன் பிக்சர்ஸை அசர வைத்த ரசிகர்கள்: எல்லாம் 'பேட்ட' ஆசை தான்
Recommended Video

சென்னை: பேட்ட பட புகைப்படத்தை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் செய்த வேலை சன் பிக்சர்ஸை வியக்க வைத்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் சசிகுமார் கதாபாத்திரத்தின் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
புகைப்படம்
பேட்ட படத்தில் வரும் ரஜினியின் புதுப்புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் இந்த ட்வீட்டை 1,000 முறை ரீட்வீட் செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனை விதித்து ட்வீட் செய்தது சன் பிக்சர்ஸ்.
ரீட்வீட்
சன் பிக்சர்ஸ் கேட்டதோ ஆயிரம் ரீட்வீட் ஆனால் ரசிகர்களோ மடமடவென 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை ரீட்வீட் செய்து அசத்திவிட்டனர். இதையடுத்து ரஜினியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

சிறப்பு
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரஜினி மிகவும் இளமையாக இருப்பதை பார்க்கும்போது 90கள் நினைவுக்கு வருகிறது. படம் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. படத்தை இயக்கியிருப்பது தலைவர் வெறியனாச்சே?

மகிழ்ச்சி
சில நடிகர்களின் ரசிகர்கள் படம் குறித்து அப்டேட் கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸோ அடிக்கடி இப்படு ஏதாவது சர்பிரைஸ் கொடுத்துக் கொண்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











