அம்பானியுடன் கொண்டாட்டம்.. கவனத்தை ஈர்த்த ஷாரூக் கான் இளைய மகன்.. ரிஹானாவுடன் ஆட்டம் போட்ட பாட்ஷா!

By yogeshwaran moorthi

ஜாம்நகர் : ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இருவரும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் நடிகர் ஷாரூக் கான் தனது மனைவி கவுரி கான், மகள் சுஹான்னா மற்றும் இளைய மகள் ஏப்ரம் ஆகியோருடன் கலந்து கொண்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

"அம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா" என்று சொல்லும் வகையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடைபெற்று முடிந்துள்ளது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள். முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானி தம்பதியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் இருவரும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

Unseen pictures of Actor Shahrukh Khan with Rihanna and family Gauri Khan Suhana khan and AbRam in the Ambani Pre Wedding Bash

அதற்கு முன்பாக மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தில் தொழிலதிபர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் என்று பல்வேறு தரப்பினரும் குவிந்தனர். இந்த 3 நாட்கள் கொண்டாட்டத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கான் குடும்பத்தினருடன் கலந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியமளித்துள்ளது.

மார்ச் 1ஆம் தேதி ஜாம் நகரில் பிரபல பாடகி ரிஹான்னாவின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரிஹான்னாவுடன் டான்ஸ் ஆடிய கொண்டாடிய ஷாரூக் கான், மார்ச் 2ஆம் தேதி கொண்டாட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார். ஆஸ்கர் விருது வென்ற "நாட்டு நாட்டு" பாடலுக்கு ஷாரூக் கான், சல்மான் கான் மற்றும் ஆமீர் கான் மூவரும் இணைந்து டான்ஸ் ஆடினர்.

Unseen pictures of Actor Shahrukh Khan with Rihanna and family Gauri Khan Suhana khan and AbRam in the Ambani Pre Wedding Bash

அதுமட்டுமல்லாமல் "தையா தையா" பாடலுக்கு ஜாலியாக ஷாரூக் கான் நடனமாட, ஒட்டுமொத்த கூட்டமும் உற்சாகமடைந்தது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகியது. இதனை தொடர்ந்து 3வது நாளில் ஷாரூக் கான் பாரம்பரிய உடையணிந்து மனைவி கவுரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஏப்ரம் ஆகியோருடன் தோன்றினார்.

மார்ச் 3 நிகழ்ச்சியில் ஏக்கானின் இசை கச்சேரி நடைபெற்ற நிலையில், மகள் சுஹான்னாவுடன் நடிகர் ஷாரூக் கான் வைப் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஷாரூக் கான் தனது மகனை அழைத்து வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் ஏப்ரமை வழக்கமாக பொது வெளியில் ஷாரூக் கான் அழைத்து வர மாட்டார். இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் ஷாரூக் கான் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X