இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் 'புட்ட பொம்மா' ரசிகர்கள் வாழ்த்து!

By

சென்னை: அல்லு அர்ஜுன் பட பாடலான புட்ட பொம்மா, யூடியூப்பில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது,

அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த தெலுங்கு படம், 'அலா வைகுந்தபுரம்லோ'. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தனது கீதா ஆர்ட்ஸ் மூலம் இதைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது. படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி இருந்த நிலையில், 'புட்ட பொம்மா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ஜானி மாஸ்டர்

ஜானி மாஸ்டர்

இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். நடனமும் விஷூவலும் இந்தப் பாடலில் ரிச்சாக இருப்பதால் ரசிகர்கள் அடிக்கடி பார்க்கின்றனர். யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து கடந்த சில மாதங்களுக்கு முன், இந்தப் பாடல் சாதனைப் படைத்திருந்தது.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

இதை ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர். வருகின்றனர். தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் பாடல் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், அவர் மனைவி உட்பட பல பிரபலங்கள் டிக் டாக்கில் நடனம் ஆடியிருந்தனர்.

Recommended Video

David Warner dance for Butta Bomma song in Tik Tok
தெலுங்கு பாடல்

தெலுங்கு பாடல்

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும், இந்த பாடலுக்கு டிக் டாக் வீடியோவில் ஆடியிருந்தார். நடிகை திஷா பதானி, இந்தப் பாடலின் நடனத்துக்காக, அல்லு அர்ஜுனை பாராட்டி இருந்தார். பின்னர் யூடியூப்பில் அதிகம் பேர் பார்த்து ரசித்த தெலுங்கு பாடலாக, புட்ட பொம்மா சாதனைப் படைத்திருந்தது.

500 மில்லியன் வியூஸ்

500 மில்லியன் வியூஸ்

இதை குறிப்பிட்டிருந்த இசை அமைப்பாளர் தமன், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த பாடல், 500 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. இதை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள கீதா ஆர்ட்ஸ் நிறுவனம், கொண்டாட்டம் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளது. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X