ஐஸ்வர்யா பெயரில் கல்லூரி-ஏமாற்றியதாக அமிதாப் மீது புகார்

உத்தரபிரதேசம் மாநிலம் பாராபஸ்கி மாவட்டத்தில் உள்ள தவுலாத்பூர் கிராமத்தில் நடிகர் அமிதாப்பச்சன் ஏராளமான விவசாய நிலங்களை வாங்கினார்.
இதில் அந்த பகுதி மக்களின் நலனுக்காக ஐஸ்வர்யா ராய் பெயரில் கல்லூரி கட்டுவதாகவும் அறிவித்தார்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2008ம் ஆண்டு பிரமாண்டமாய் நடந்தது. இதில் அமிதாப் பச்சன், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பொதுச் செயலாளர் அமர் சிங், ஜெயாபச்சன், அபி ஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் கல்லூரி கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமாரி என்பவர் பாராவஸ்கி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில் அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 6 பேரும் கல்லூரி கட்டி தருவாக கூறி கிராம மக்களை ஏமாற்றி நிலம் வாங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மொகமாத்பூர் காலா, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட 6 பேரிடமும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஜூன் 10ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











