பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி போல உடம்பு வேண்டும்.. இயற்கைக்கு மாறாக மனைவியை டார்ச்சர் செய்த கணவர்..
உத்தரபிரதேசம்: காமுகர்களின் அட்டகாசம் என்பது எப்போதுமே மிகவும் மோசமானதாகத்தான் இருந்துள்ளது. குறிப்பாக இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்வதில் தொடங்கி, தங்களது இணையருக்கு அவர்கள் அளிக்கும் பாலியல் தொல்லைகள் என்பது அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்துள்ளது. அப்படியான ஒரு காமக் கொடூரன் குறித்து இப்போது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.
பொதுவாக ஆண்களுக்கு பிரியமான நடிகைகள் இருப்பார்கள். திருமணம் ஆகாத, காதலில் இல்லாத ஆண்களிடம், உங்களுக்கு எப்படியான மனைவி வேண்டும் என்று கேட்டால், நடிகை ஸ்ரீதேவி மாதிரி வேண்டும் என 80ஸ் கிட்ஸ்களும், சிம்ரன், த்ரிஷா மாதிரி வேண்டும் என 90ஸ் கிட்ஸ்களும் சொல்லிக் கேட்டிருப்போம். 2 கே கிட்ஸ்கள் குறித்து சொல்ல வேண்டும் என்றால் அவர்கள், பெரும்பாலும் ஹாலிவுட் நடிகைகளை தங்களது வரிசையில் வைத்திருப்பார்களோ என்று யூகிக்க தோன்றுகிறது. வெகு சிலர் இதில் எல்லா தலைமுறைகளிலும் விதிவிலக்கு.

இப்படி இருக்கும்போது, உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணான ஷான்வி, காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவர் ஷிவம் உஜ்வால், ஒரு காமக் கொடூரன் எனவும், எப்போதும் மற்ற பெண்களை காம எண்ணத்தில்தான் அணுகுவார் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது சமூக வலைதளங்களில் ரொம்பவும் கிளாமராக புகைப்படங்களைப் பதிவிடும் நடிகைகள் தொடங்கி, இளம் பெண்கள் வரை பலரையும் அவர் பின் தொடர்வதாகவும், பின் தொடர்வது மட்டும் இல்லாமல், இணையத்தில் ஆபாச படங்களைப் பார்த்துவிட்டு, அதேபோல் தன்னையும் உடலுறவுக்கு ஒத்துழைப்பு தர சொல்லி சித்திரவதை செய்வதாகவும் புகார் அளித்துள்ளார்.
இயற்கைக்கு மாறான: மேலும் அந்த புகாரில், பெரும்பான்மையாக இயற்கைக்கு மாறான உடலுறவில் தன்னை ஈடுபடும்படி நிர்பந்திக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். புகார் அளித்த பெண், தான் அழகாகவும், தனது உயரத்திற்கு ஏற்ற உடலமைப்புடன் இருந்தாலும், தனது கணவர் மற்றும் மாமியார், தினமும் தன்னை மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்யச் சொல்லி கட்டாய படுத்துவதாகவும். மூன்று மணி நேரத்தில் கொஞ்சம் தவறினாலும், உணவு மறுக்கப்படுகிறது.

சித்திரவதை: இது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி போல் என்னுடைய உடல் அமைப்பு மாற வேண்டும் என சித்திரவதை செய்கிறார்கள். தான் கர்ப்பமான பின்னர், உணவில் கருச்சிதைவு மாத்திரைகள் கலந்து கொடுத்து எனது உடலையும் நாசப்படுத்தி விட்டார்கள் எனவும் அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார். உஜ்வால் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்ததை அடுத்து, உஜ்வாலால் தான் தாக்கப்பட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இவரது புகாரை அடுத்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
நோரா ஃபதேஹி: பாலிவுட் நடிகை நோரா ஃப்தேகி, முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இது மட்டும் இல்லாமல் இவர் தன்னை ஒரு கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டாக அடையாளப் படுத்தி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட, தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 47 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இவரது கிளாமர் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தை ஆக்கிரமித்து வந்துள்ளது. தற்போது ஒரு காமக் கொடூரன், நடிகை நோரா ஃபதேஹி போன்ற உடலமைப்பு தனது மனைவிக்கு வேண்டும் என நிர்பந்தித்து கொடுமைப் படுத்திய செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











